மோசமான சிபில் ஸ்கோர் இருக்கிறதா? இந்த 7 வழிகளை பின்பற்றுங்கள்!
உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால், அதை கடன் தரும் வகையில் அதிகப்படுத்த பல வழிகள் உள்ளது. உங்களின் கிரெடிட் கார்ட் கடனை குறைப்பது, தவணை கட்டாத கணக்குகளைச் சரி செய்வது, புதிய கணக்குகளை திறக்காமல் இருப்பது போன்ற வழிமுறைகள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்காக பரிந்துரைக்கப்படும் சில வழிமுறைகள்:
கிரெடிட் ரிப்போர்ட்:
சிபில் (CIBIL) அமைப்பிடம் இருந்து உங்கள் கடன் அறிக்கையை பெறுங்கள். அதில் ஏதாவது தவறுகளோ அல்லது குறைபாடோ இருக்கிறதா என கவனமாக பாருங்கள். அப்படி ஏதாவது இருந்தால் அது நிச்சயம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும்.
தவணை கட்டாத கணக்குகளை சரி செய்யுங்கள்:
உங்கள் கணக்குகளில் எதிலாவது கடந்த காலங்களில் தவணை செலுத்தாமல் நிலுவை இருந்தால், அதை சீக்கிரம் முடிக்கப் பாருங்கள். உங்களுக்கு கடன் தந்த நிறுவனத்திடம் பேசி, திரும்ப செலுத்தும் வசதி உள்ளதா அல்லது கடனை முடித்துக்கொள தீர்வு ஏதாவது இருக்கிறதா என்பதை கலந்தாலோசியுங்கள்.
தவறுகளை களையுங்கள்:
உங்கள் கிரெடிட் அறிக்கையில் ஏதாவது தவறுகள் இருக்கும்பட்சத்தில், அதை சரி செய்யும் படி கிரெடிட் பியூரோவை தொடர்பு கொள்ளுங்கள். அதற்குண்டான சரியான ஆவணங்களை அவர்களிடம் சமர்ப்பியுங்கள். இதுபோன்ற தவறுகளை சரி செய்வதன் மூலம் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்த முடியும்.
கிரெடிட் கார்டு பேலன்ஸை குறையுங்கள்:
உங்கள் கிரெடிட் கார்டின் பேலன்ஸ் தொகை அதிகமாக இருந்தால், அது கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். உங்களின் கிரெடிட் பயன்பாட்டு விகிதங்களை குறைக்க வேண்டுமென்றால், முதலில் கிரெடிட் கார்ட் கடனை அடைப்பதில் கவனம் செலுத்துங்கள். எப்போதும் உங்கள் கிரெடிட் பயன்பாட்டு விகிதத்தை 30 சதவிகிதத்திற்கும் குறைவாக வைத்திருங்கள்.
புதிய கணக்குகளை திறக்காதீர்கள்:
புதிய கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்ற ஆசை உங்களுக்கு வரும். ஆனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் தயவுசெய்து இந்த தவறை செய்யாதீர்கள். நீங்கள் புதிய கணக்குகள் திறந்தால், உங்கள் கிரெடிட் அறிக்கையை புதிதாக விசாரிக்க வேண்டிவரும். இது தற்காலிகமாக உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும்.
உத்தரவாதமான கிரெடிட் கார்டு:
பாரம்பரியமான கிரெடிட் கார்டு வாங்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை என்றால், உத்தரவாதம் அளிக்கும் கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கவும். இந்த கார்டு வாங்க வேண்டுமென்றால் நாம் சிறு தொகையை டெபாசிட் செய்ய வேண்டியிருக்கும். இதனால் எந்த பயமுமம் இன்றி கடன் தரும் நிறுவனங்கள் இந்த கார்டை வழங்குகின்றன. மோசமான கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
பொறுமை ரொம்பவும் முக்கியம்:
நம்முடைய மோசமான கிரெடிட் ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டு வர அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும். உங்கள் நிதிநிலை விஷயங்களில் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தவணை கட்டுவது, பேலன்ஸை குறைவாக வைத்துக்கொள்வது, அடிக்கடி நமது வளர்ச்சியை கண்காணிப்பது போன்றவை உதவியாக இருக்கும். காலப்போக்கில் நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகள் உங்களின் கிரெடிட் ஸ்கோரில் நிச்சயம் எதிரொலிக்கும்.
இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றுவதோடு பொறுப்பாக நடந்து கொண்டால் உங்கள் கிரெடிட் ஸ்கோரை நல்லபடியாக அதிகரிக்க முடியும்.