இந்த தப்பை செய்ததற்காக 4 புள்ளிகள் போச்சு.. பரிதாப நிலைக்கு சென்ற நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நிதி விதிகளை மீறியதற்காக நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணிக்கு அந்த தொடரின் லீக் சுற்றின் புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையால் பிரீமியர் லீக்கின் வெளியேற்ற மண்டலத்துக்கு (Relegation zone) தள்ளப்பட்டு இருக்கிறது ஃபாரஸ்ட் அணி. பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் இன்னும் ஒன்பது போட்டிகளே மீதமிருக்கும் நிலையில் அந்த அணி 18வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

பிரீமியர் லீக், ஃபாரெஸ்ட் லாபம் மற்றும் நிலைப்புத்தன்மை விதிகளை (PSR) அவர்கள் அனுமதிக்கப்பட்ட 61 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் 34.5 மில்லியன் பவுண்டுகள் கூடுதலாக நஷ்டம் அடைந்ததை ஒப்புக்கொண்டது.

மூன்று வருட மதிப்பீட்டு காலத்தில் கிளப்களுக்கு வழக்கமாக அதிகபட்சமாக 105 மில்லியன் பவுண்டுகள் வரை நஷ்டம் அடைய அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் இது ஒரு சாம்பியன்ஷிப் தொடருக்கு 22 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் குறைக்கப்படுகிறது. அந்த வகையில் ஃபாரஸ்ட் அணி அதிக நஷ்டத்தை சந்தித்து இருப்பதால் அந்த அணிக்கு விதிப்படி லீக் சுற்றில் நான்கு புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது.

நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணி 2023 – 2024 பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றில் இதுவரை 29 போட்டிகளில் ஆடி 6 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. 7 டிரா மற்றும் 16 தோல்விகளை சந்தித்து 25 புள்ளிகளுடன் இருந்த நிலையில், தற்போது மேலும் நான்கு புள்ளிகள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த அணி 21 புள்ளிகளுடன் 18வது இடத்தில் உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *