6 ஐபிஎல் கோப்பைகள்.. தோனியை விட அதிக முறை வென்ற 2 வீரர்கள்.. யார் தெரியுமா?
தோனியை விட இரண்டு வீரர்கள் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்று இருக்கின்றனர். ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற இரண்டு அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ். இந்த இரண்டு அணிகளுமே ஐந்து முறை கோப்பை ஐபிஎல் கோப்பை வென்றுள்ளன.
இதில் தோனி மற்றும் ரோஹித் சர்மா என இருவருமே கேப்டன்களாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று சாதனை படைத்துள்ளனர். ஆனால், ஒரு வீரராக அதிக ஐபிஎல் கோப்பை வென்ற வீரர்கள் பட்டியலை எடுத்துக் கொண்டால் அதில் அம்பதி ராயுடு மற்றும் ரோஹித் சர்மா ஆறு முறை ஐபிஎல் கோப்பை வென்று தோனியை முந்தி இருக்கிறார்கள்.
அம்பதி ராயுடு 2013, 2015 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று அந்த அணிக்காக மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றார். அடுத்து சிஎஸ்கே அணியில் இணைந்த அவர் 2018, 2021 மற்றும் 2023 என மூன்று முறை ஐபிஎல் கோப்பை வென்றார்.
அதே போல ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்ற நிலையில், அதற்கு முன்னதாக டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று 2009 ஐபிஎல் தொடரில் கோப்பை வென்று இருந்தார். அந்த வகையில் தோனிக்கும் முன்னதாக ஐபிஎல் கோப்பை வென்று இருந்தார் ரோஹித் சர்மா.
இவர்கள் இருவரும் அதிக முறை ஐபிஎல் கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்கள். அடுத்த இடத்தில் தோனியுடன், பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று இடம் பெற்றுள்ளனர்.
தோனி சிஎஸ்கே அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்றார். பும்ரா 2013ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஐந்து முறை ஐபிஎல் கோப்பை வென்று இருக்கிறார். ஹர்திக் பாண்டியா 2015 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று 2020 வரை நான்கு முறை அந்த அணிக்காக கோப்பை வென்றார். பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக 2022 ஆம் ஆண்டு தனது ஐந்தாவது ஐபிஎல் கோப்பையை வென்றார்.