உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க? அப்போ இந்த பண்புகள் கட்டாயம் இருக்கும்

பொதுவாக ஒருவர் பிறக்கும் போது வானில் தோன்றும் ராசி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே ஒருவருடைய ஜாதகம் கணிக்கப்படும்.

அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு என குறிப்பிட்ட சில தனித்துவமான ஆளுமைகளும் விசேட பண்புகளும் காணப்படுகின்றது இவை தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

விசேட குணங்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பார்கள். எந்த சூழ்நிலையையும் உறுதியுடன் எதிர்கொள்ளும் பண்பு இவர்களுக்கு நிச்சயம் இருக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த நிலைமையிலும் உண்மை பேசு குணம் கொண்டவர்கள் இவர்களின் குரலும் மிகவும் இனிமையாக அமைந்திருக்கும்.

மிகவும் நேர்மையாக நடந்துக்கொள்ளும் இவர்களிடத்தில் கர்வம் சற்று அதிகமாக இருக்கும். மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் பேசும் இவர்கள் தாய் மீது அதிகம் பாசம் வைத்திருப்பார்கள்.

பிறருக்கு உதவி செய்யும் குணம் இவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கும் அதே சமயம் பிறர் செய்த உதவிக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பார்கள்.

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் இருக்கும் இவர்கயுக்கு பொது விடயங்கள் சார்ந்த அறிவு மற்றும் கவ்வி அறிவு நிறைவாக இருக்கும்.

கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட இவர்கள் அனைத்து காரியங்களையும் உண்மையாகவும் மழு மனதுடனும் செய்ய நினைப்பார்கள்.

சொந்த முயற்சியில் பணம் சம்பாதிக்த்து தான் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் உறுதியாக இருக்கும்.

இவர்கள் கடின உழைப்பாழிகளாக இருக்கும் அதே நேரம் அனைவரையும் கவரக்கூடிய வகையில் முக அமைப்பும் சிறந்த பேச்சாற்றலும் இவர்களிடம் காணப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *