இன்று தான் கடைசி நாள்..! உடனே செஞ்சிடுங்க இல்லையென்றால் உங்கள் வங்கிக் கணக்கு மூடப்படும்..!

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின் படி வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் சேவைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆர்பிஐயின் அறிவுறுத்தலின்படி பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதாவது மார்ச் 19ஆம் தேதிக்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும். இதை முடிக்காத பட்சத்தில் வங்கி கணக்கு சேவைகள் பாதிக்கப்படலாம் அல்லது கணக்கு முடக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023 டிசம்பர் 31ஆம் தேதி வரை தங்கள் கணக்குகளின் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காத வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 19 கடைசித் தேதியாகும். கேஒய்சி அப்டேட் தொடர்பான விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில் அவரகளுக்கு தற்போது கடைசி வாய்ப்பு வந்துள்ளது. இந்த வேலையை முடிக்க ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது.

கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வாடிக்கையாளர்கள் தங்கள் கிளைக்குச் சென்று அவர்களின் ஐடி, முகவரிச் சான்று, புகைப்படம், பான் கார்டு, வருமானச் சான்று, மொபைல் நம்பர் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்கள் நேரடியாகவோ அல்லது PNB ஆப் அல்லது இண்டர்நெட் பேங்கிங் மூலமாகவோ தங்களுடைய கேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம்.

மார்ச் 19ஆம் தேதிக்குள் உங்கள் கணக்கின் KYC சரிபார்ப்பை முடிக்கவில்லை என்றால், உங்கள் கணக்கு மூடப்படலாம். இதற்குப் பிறகு, கணக்கை ஆக்டிவேட் செய்ய நீங்கள் சிரமப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *