முடி உதிர்வை அடியோட நிறுத்தணுமா? இந்த 4 ஹேர் மாஸ்க்குகள் போதும்

முடி உதிர்தல் என்பது பலரையும் இம்சை படுத்தும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். முடி தொடர்ந்து உதிர்ந்துக் கொண்டு வந்தால் உச்சஞ்தலை வழுக்கையாக ஏற்படத் தொடங்கும். பல நேரங்களில், முடி உதிர்வு காரணமாக, தலையில் முடியை விட அதிகமான உச்சந்தலையில் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், முடி உதிர்வதை சரியான நேரத்தில் நிறுத்துவது மிகவும் முக்கியமாகும். இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம், மரபியல், வானிலை மாற்றம், வெப்ப பாதிப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்றவை இருக்கலாம். இதனால் முடி உதிரத் தொடங்குகிறது. இந்நிலையில் உடனடியாக முடி உதிர்வை தடுக்கக்கூடும் அத்தகைய சில ஹேர் மாஸ்க்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஹேர் மாஸ்க்குகளை வீட்டிலேயே எளிதாக தயாரித்து பயன்படுத்தலாம். இதனால் முடி உதிர்வது குறைந்து கூந்தல் முன்பை விட அடர்த்தியாகவும் மென்மையாகவும் வளரத் தொடங்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க ஹேர் மாஸ்க் | Hair Mask To Stop Hair Fall
தேன் ஹேர் மாஸ்க் | Honey Hair Mask:
இந்த ஹேர் மாஸ்க்கை தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் தேனுடன் நன்றாக கலந்துக் கொள்ளவும். இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து பிறகு இந்த பேஸ்ட்டை தலையில் நன்றாக தடவவும். இந்த ஹேர் மாஸ்க்கில், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது, பின்னர் அரை மணி நேரம் முடியில் தடவி, கழுவ வேண்டும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடியில் தடவலாம்.
வெங்காயம் ஹேர் மாஸ்க் | Onion Hair Mask
வெங்காயத்தின் ஆயுர்வேத பண்புகள் முடிக்கு மிகவும் நன்மை பயக்கும். இதற்கு வெங்காயத்தை தட்டி அதன் சாறு முதலில் எடுத்துக் கொள்ளவும். இந்த சாற்றை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும். இதனை முடி முழுவதும் தடவி குறைந்தது ஒரு மணி நேரம் வைத்திருந்து பின்னர் கூந்தலை கழுவவும். இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 2 முதல் 3 முறை வெங்காயத்தை தலையில் தடவி வந்தால் முடி உதிர்வவை தடுக்கலாம். அதுமட்டுமின்றி வெங்காயச் சாற்றின் பண்புகள் முடி வளர்ச்சியிலும் பயனுள்ளதாக இருக்கும்.
முட்டை ஹேர் மாஸ்க் | Egg Hair Mask
கூந்தலுக்குப் புரதம் தேவை, முடிக்கு இந்த புரதம் முட்டையிலிருந்து வழங்கப்படுகிறது. முட்டை ஹேர் மாஸ்க் முடிக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க்கை தயாரிக்க, முதலில் ஒரு முட்டையை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை நன்றாக கலந்துக் கொள்ளவும். பின்னர் இந்தக் கலவையை முடி முழுவதும் தடவி அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். அதன் பிறகு உங்கள் தலை முடியை கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். இந்த ஹேர் மாஸ்க் முடி உதிர்வைக் குறைப்பதில் நல்ல விளைவை தரும்.
வெந்தய ஹேர் மாஸ்க் | Fenugreek Hair Mask
வெந்தய விதை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இந்த விதையின் ஹேர் மாஸ்க் முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது. இந்த ஹேர் மாஸ்க் தயாரிக்க, வெந்தய விதையை இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில், இந்த தானியங்களை அரைத்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும். வெந்தய விதைகளின் இந்த ஹேர் மாஸ்க்கை தலையில் அரை மணி நேரம் வைத்திருந்து பின்னர் கழுவவும். சிறந்த பலனுக்கு வெந்தயத்துடன் கறிவேப்பிலையை கலந்து ஹேர் மாஸ்க் செய்து பயன்படுத்தலாம்.