வருகிறது ஹோலி.. வண்ணங்களில் மூழ்கி விளையாடும் முன் இதை பண்ணுங்க
வண்ணங்களின் பண்டிகை ஹோலி பண்டிகையானது இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மக்கள் வண்ணங்களுடன் விளையாடி மகிழ்வர். ஆனால் ஹோலியின் வண்ணங்களால் சருமம் பாதிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், ஹோலியின் நிறங்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க சில இயற்க்கை சரும பராமரிப்பை பின்பற்றினால் போதும். அவற்றை என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஹோலி விளையாடும் முன் கண்டிப்பாக உங்கள் சருமத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். இதனால் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.
ஹோலி விளையாடுவதற்கு முன், முகத்தில் மாய்ஸ்சரைசர் தடவவும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் சருமத்தில் ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாகும் மேலும், சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.
ஹோலி விளையாடுவதற்கு முன் பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் தடவலாம். இது ஹோலியின் நிறங்களை எளிதாக நீக்க உதவும், சருமம் வறண்டு போகாமல் பாதுகாக்கும்.
ஹோலி விளையாடுவதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவலாம். நிறங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து இது பாதுகாக்க உதவும். கூடுதலாக, இது சருமத்தை ஈரப்பதமாக்க உதவும்.
இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவவும். இதற்கு முகத்தை நன்றாக கழுவி பின் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இது சருமத்தை ஈரப்பதமாக்குவதோடு, முகத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.