கனடாவில் மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு… இந்தியர் செய்த செயல்
இந்தியாவின் பஞ்சாபை சேர்ந்த நபர், தமது மனைவியை கொலை செய்த வழக்கில் கனேடிய அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
சம்பவயிடத்தில் இருந்தே கைது
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலேயே தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. 41 வயதான Balwinder Kaur என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கத்திக்குத்து காயங்களுடன் Abbotsford பகுதி குடியிருப்பு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டார்.
மார்ச் 15ம் திகதி தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த பெண்மணி உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்புடைய பெண்மணியின் கணவர் Jagpreet Singh சம்பவயிடத்தில் இருந்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவியை கொடூரமாக தாக்கிய பின்னர் Jagpreet Singh தமது தாயாருக்கு காணொளி அழைப்பில் தகவல் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நிரந்தரமான தூக்கத்திற்கு அவளை அனுப்பி வைத்தேன் என்றே Jagpreet Singh தமது தாயாரிடம் குறிப்பிட்டதாக பல்விந்தர் கவுரின் சகோதரி குறிப்பிட்டுள்ளார். பல்விந்தர் கவுர் கனடாவில் வேலை பார்த்து வந்துள்ளார்.
ஒரு வாரம் முன்னர் தான் Jagpreet Singh கனடா சென்றுள்ளார். மட்டுமின்றி வேலைக்கு செல்லாத நிலையில், நிதி நெருக்கடி தொடர்பில் கணவனும் மனைவிக்கு இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
நாங்கள் துன்புறுத்தவும் இல்லை
2,000 ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதனிடையே, Jagpreet Singh மற்றும் அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை இருப்பதை மறுத்துள்ள குடும்பம்,
அவர்கள் மகிழ்ச்சியான தம்பதி என்றும் பல்விந்தர் கவுரை நாங்கள் துன்புறுத்தவும் இல்லை என்று ஜக்ப்ரீத்தின் சகோதரர் தெரிவித்துள்ளார். தவறுதலாக மனைவியை காயப்படுத்தியதாகவே ஜக்ப்ரீத் தமது தாயாரிடம் கூறியதாக அந்த சகோதரர் தெரிவித்துள்ளார்.
மேலும், நடந்த சம்பவத்திற்கு ஜக்ப்ரீத் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார் என்றும், எதுவும் திட்டமிட்ட செயல் அல்ல என்றும், அவர்களின் மகளும் வெளியில் இருந்ததால் அன்று இரவு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது எனவும் ஜக்ப்ரீத்தின் சகோதரர் தெரிவித்துள்ளார்.