IPL MS Dhoni Hairstyle: 2024ல் டிராபியை கைப்பற்ற தோனி ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி – வைரலாகும் புகைப்படம்!
கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் எந்த ஹேர்ஸ்டைல்களில் இருக்கிறார்களோ அதே போன்று ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மாறுவது என்பது இயல்பான ஒன்று தான். ஒன்று ஒரு லெஜெண்ட் மற்றொரு ஜாம்பவான் போன்று மாறுவது சற்று வேடிக்கையாக இருக்கிறது. இது அவர் மீது வைத்த அன்பினால் கூட இருக்கலாம். அப்படி என்ன என்று கேட்டால், ஐபிஎல் தொடரில் கடந்த சில சீசன்களுக்கு முன்பு தோனி என்ன ஹேர்ஸ்டைலுடன் இருந்தாரோ அதே போன்ற ஒரு ஹேர்ஸ்டைலுக்கு விராட் கோலி மாறியிருக்கிறார். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஐபிஎல் சீசன் போதும் தோனி விதவிதமான ஹேர்ஸ்டைலுடன் ரசிகர்களுக்கு காட்சி கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி ஒரு ஹேர்ஸ்டைலுடன் இந்த சீசனிலும் காணப்படுகிறார். ஒரு மாடல் எப்படி இருப்பாரோ அதே போன்று தலை நிறைய முடியுடனும், பின்புறம் அதிகம் வளர்ந்த முடியுடன் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார்.
தோனியைப் போன்று சைடு பக்கம் முழுவதும் கட் செய்து பின்புறம் வி வடிவத்திற்கு வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரையில் நடந்த 16 சீசன்களில் ஒரு முறை கூட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டிராபியை கைப்பற்றவில்லை.
ஆனால், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் டிராபியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையை ஆர்சிபி மட்டுமின்றி ஒட்டு மொத்த பெங்களூரு ரசிகர்களும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Virat Kohli's new look for IPL 2024…!!!! pic.twitter.com/8LJdSL9fQ8
— Johns. (@CricCrazyJohns) March 19, 2024
17ஆவது ஐபிஎல் 2024 தொடர் வரும் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். சிஎஸ்கே 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது. ஆனால், ஆர்சிபி ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. இந்த முறை டிராபியை கைப்பற்ற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்:
மார்ச் 22 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி
மார்ச் 26 – குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி
மார்ச் 31 – டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் – விசாகப்பட்டினம் – இரவு 7.30 மணி
ஏப்ரல் 05 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் – இரவு 7.30 மணி
ஆர்சிபி விளையாடும் போட்டிகள்:
மார்ச் 22 – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி
மார்ச் 25 – பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி
மார்ச் 29 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி
ஏப்ரல் 02 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி
ஏப்ரல் 06 – ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்ப்பூர் – இரவு 7.30 மணி