Fish Curry : வஞ்சரம் மீன் குழம்பு – வாயில் வைத்தவுடனே வழுக்கிக்கொண்டு ஓடும்! சுவையிலும் அசத்தும்!
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
வஞ்சரம் மீன் குழம்பு செய்ய
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 30 நறுக்கியது
முழு சின்ன வெங்காயம் – 15
பூண்டு – 15 பல்
பச்சை மிளகாய் – 3 கீறியது
கறிவேப்பிலை – 2 கொத்து
இஞ்சி-பூண்டு விழுது – 3 ஸ்பூன்
தக்காளி – 4 (நறுக்கியது)
கல் உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மல்லித்தூள் – 3 ஸ்பூன்
கெட்டியான புளி கரைசல் – ஒரு கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது – ஒரு கைப்பிடி
செய்முறை –
மீனில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவேண்டும்.
மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், முழு சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக 10 – 15 நிமிடங்கள் வதக்க வேண்டும்.
பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து கலந்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவேண்டும்.
பின்னர் கல் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
கெட்டியான புளி கரைசல் சேர்த்து கலந்துவிட்டு, தண்ணீர் ஊற்றி கலந்து 5 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் ஊறவைத்த மீன் துண்டுகளை அதில் சேர்க்க வேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவேண்டும்.
அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்.
சூடான சாத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
மீன் குழம்பை சமைத்து 4 மணி நேரங்கள் ஊறவிடவேண்டும். அப்போதுதான் மசாலாக்கள் மீனில் ஏறி சுவை நன்றாக இருக்கும். எனவே மதியம் சாப்பிடவேண்டுமெனில் காலையிலேயே செய்து வைத்துவிடவேண்டும்.
பாத்திரத்தை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவேண்டும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவேண்டும்.
அட்டகாசமான வஞ்சரம் மீன் குழம்பு தயார்.
சூடான சாத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
மீன் குழம்பை சமைத்து 4 மணி நேரங்கள் ஊறவிடவேண்டும். அப்போதுதான் மசாலாக்கள் மீனில் ஏறி சுவை நன்றாக இருக்கும். எனவே மதியம் சாப்பிடவேண்டுமெனில் காலையிலேயே செய்து வைத்துவிடவேண்டும்.
வஞ்சிரம் மீன் மிகுந்த சுவை நிறைந்தது. ஒரே ஒரு முள் கொண்டது என்பதால் குழம்பு வைத்து சாப்பிடும்போது, முள்ளை எடுப்பதும் வசதியாகிறது. இதை செய்யவும் சிறிது நேரமே போதுமானது. எனவே இந்த மீன் குழம்பை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
நன்றி – ஹேமா சுப்ரமணியன்.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொருத்தமட்டில் தலைநகர் தில்லி உள்ள வட மாநிலங்கள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து கவலைக்கிடமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
காற்று மாசுபாடு மனநல பிரச்சனைகளை ஏற்படுத்துமா? மூளை பாதிப்பு எப்படி ஏற்படலாம் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மனநலம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) சுற்றுச்சூழல் மாசுபாடு மனநலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் என்று கூறியது. ICMR துணை இயக்குநர் ஜெனரல், புதுடெல்லி, மனநலத்தில் காற்று மாசுபாட்டின் விளைவுகள் குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
காற்று மாசுபாட்டில் உள்ள பல்வேறு இரசாயனங்கள் மனித உடலின் பல்வேறு உறுப்புகளில், குறிப்பாக மூளையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று NGT தெரிவித்துள்ளது.
NGT இன் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, காற்று மாசுபாடு மற்றும் மோசமான மன ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான சாத்தியமான காரண தொடர்புகளை ஆராய அதிக உயிரியல் மருத்துவ ஆய்வுகள் தேவை என்று பரிந்துரைத்தது. தற்போதைய மெட்டா பகுப்பாய்வு 22 ஆய்வுகளை ஆய்வு செய்தது. இது காற்று மாசுபாட்டிற்கும் கவலைக்கும் இடையே வலுவான தொடர்பைக் கண்டறிந்தது.
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் சைக்கியாட்ரியில் வெளியிடப்பட்ட சில ஆய்வுகளில் இதே போன்ற தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு நைட்ரஜன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் PM 2.5 ஆகியவற்றின் அதிகரிப்பு ஒரு நபரின் மன நிலையை கடுமையாக பாதிக்கும் என்று அவதானிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு பல்வேறு உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்து கிறது என்பது தெரியும் ஆனால் காற்றுமாசு தற்போது மனச்சோர்வு மற்றும் மன நல பிரச்சனைகளைள ஏற்படுத்துகிறது எனஅதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதை ICMR சுட்டிக்காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.