ஹரி, மேகன் மகாராணிக்கு துரோகம் செய்தார்கள்! பயங்கரமான விடயங்கள் எலிசபெத்தின் இதயத்தை உடைத்தது – டொனால்டு டிரம்ப் காட்டம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இளவரசர் ஹரி மற்றும் மேகன் மறைந்த மகாராணி எலிசபெத்திற்கு துரோகம் செய்ததாக காட்டமாக கூறியுள்ளார்.

கடுமையான விமர்சனம்
குடியரசுக் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் (Donald Trump) மறைந்த மகாராணி எலிசபெத்தினை அடிக்கடி புகழ்ந்து, பிரித்தானிய முடியாட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் 77 வயதான டிரம்ப், இளவரசர் ஹரி மற்றும் மேகனை கடுமையாக விமர்சித்தார்.

அவர்கள் இருவரும் தங்கள் பொது ஆய்வு மூலம் ராணிக்கு துரோகம் செய்தார்கள் என்று நம்பும் டிரம்ப், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் டியூக் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டினார்.

இதயத்தை உடைத்துவிட்டனர்
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தைப் பற்றிக் கூறிய ‘மோசமான மற்றும் பயங்கரமான’ விடயங்களால், ராணி எலிசபெத்தின் இதயத்தை உடைத்துவிட்டதாக டிரம்ப் கூறினார்.

ராணி குறித்து அவர் பேசும்போது, ”அவர் வலிமையாகவும், புத்திசாலியாகவும் இருந்ததால் அவர் அதைக் காட்ட மாட்டார், ஆனால் அவள் இதயத்தை உடைத்துவிட்டாள் என்று நான் கற்பனை செய்கிறேன். அவர்கள் கூறும் விடயங்கள் மிகவும் மோசமானவை மற்றும் மிகவும் கொடூரமானவை. மேலும் ராணி தனது 90களில் (வயது) இருந்தபோது இந்த விடயங்களைக் கேட்டார்” என தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டில் அரச குடும்பத்தில் தங்கள் கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்த ஹரி மற்றும் மேகன், பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வசிக்கின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *