த்ரிஷா Vs நயன்தாரா… இன்ஸ்டாகிராமில் அடித்துக்கொள்ளும் நடிகைகளின் ரசிகர்கள்

நடிகை த்ரிஷாவுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்த நடிகை நயன்தாராவுக்கு தற்போது த்ரிஷாவை விடவும் அதிகமான followers இருக்கின்றார்கள்.

குறித்த விடயம் தற்போது இரண்டு நடிகைகளின் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு பனிபோராக மாறிவருகின்றது.

த்ரிஷா Vs நயன்தாரா
சினிமாவின் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்கள் தான் நடிகை த்ரிஷா மற்றும் ரயன்தாரா. இவர்கள் இருவரும் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவரகள்.

மேலும், இவர்கள் இருவரும் தமிழ்த் திரையுலகில் நீண்ட காலமாக கதாநாயகிகளாகவே தங்களின் இருப்பபை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட இவர் முதலில் மாடலிங் துறையில் பிரபலமாக இருந்து பின்னர் சினிமா துறையில் கால் பதித்தவர் தான் நடிகை த்ரிஷா.

லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

திரையுலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படுபவர், நயன்தாரா. தமிழ் சினிமாவில் ஐயா படம் மூலம் அறிமுகமான இவர், தற்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

சினிமாவில் தனக்கென என்றும் அழிக்க முடியாத ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்ட இவர் இன்று வரை கதாநாயகி என்ற இடத்தை காப்பாற்றி வருகின்றார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்துள்ளதுடன் குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.

இருவருமே திரைப்படங்களில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தலங்களிலும் ஆர்வமாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷாவுக்கு இன்ஸ்டாகிராமில் 6.9 மில்லியன் followers இருக்கின்றனர். ஆனால் த்ரிஷாவுக்கு பின்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஆரம்பித்த நடிகை நயன்தாராவுக்கு 7.9 மில்லியன் followers இருக்கின்றார்கள்.

குறித்த விடயம் தற்போது த்ரிஷா மற்றும் நயன்தாராவின் ரசிகள் மத்தியில் இணையத்தில் ஒரு பனிப்போராக மாறிவருகின்றது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *