குட் நியூஸ்..! PF சந்தாதாரர்களுக்கு ரூ.50,000/- வரை போனஸாக அறிவிப்பு ..!
EPFO நிறுவனத்தில் துவங்கப்படும் PF கணக்குகளில் ஊழியர்களின் ஓய்வு காலத்தில் உதவும் விதமாக அவர்களது சம்பளத்தில் சிறு தொகை பிடித்தம் செய்யப்பட்டு சேமிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகைக்கு EPFO வட்டி வழங்குவதோடு மட்டுமில்லாமல் PF பயனர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு திட்டங்களையும், விதிமுறைகளையும் அறிவித்து கொண்டு இருக்கிறது. இந்த வகையில் EPFO நிறுவனத்தின் லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் திட்டத்தின் கீழ் PF பயனர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. பிஎஃப் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் இந்த சிறப்புச் சலுகை குறித்து நிறையப் பேருக்கு தெரிவதில்லை.
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு காப்பீடு மட்டுமல்லாமல் பல நன்மைகளைப் பெறலாம். EPF சந்தாதாரர்களுக்கு போனஸ் போன்ற கூடுதல் பலன்களும் கிடைக்கும். ஆனால் இதற்கு சில முக்கியமான நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளைப் பொறுத்து போனஸ் தொகை அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். இந்த கூடுதல் போனஸ் ஊழியர்களுக்கு லாயல்டி மற்றும் லைஃப் பெனிஃபிட் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அதாவது குறைந்து 20 ஆண்டுகள் PF பயனராக உள்ள நபர்களுக்கு அவர்களது ஊதியத்தை அடிப்படையாக கொண்டு போனஸ் வழங்கப்படுகிறது. மேலும், அந்தந்த ஊழியர்களின் சம்பளத்திற்கு ஏற்ப கூடுதல் போனஸ் நிர்ணயிக்கப்படுகிறது. 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ரூ. 40,000 வரை கூடுதல் போனஸ் கிடைக்கும். ரூ.10,000க்கு மேல் அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.50,000 கூடுதல் போனஸ் பெறலாம்.
பிஎஃப் சந்தாதாரர் 20 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றால் அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அத்தகைய ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு கூடுதல் போனஸ் வழங்கப்படும். ஆனால் கூடுதல் போனஸின் அளவை நிர்ணயிப்பதற்கான விதிகளும் உள்ளன. அதாவது அவர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையிலேயே போனஸ் தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
தகுதியான பிஎஃப் உறுப்பினர்கள் இந்த கூடுதல் போனஸ் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தங்கள் கணக்கில் நாமினி பெயரைச் சேர்க்காத ஊழியர்களுக்கு இந்த வசதி கிடைக்காது. எனவே நாமினி பெயரை அப்டேட் செய்யாத பணியாளர்கள் இதை உடனடியாக முடிக்க வேண்டும்.