Mars Transit: செவ்வாய் மூட்டையை தூக்கி விட்டார்.. பணம் இந்த ராசிகளுக்கு தான்
செவ்வாய் பகவான் நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருகிறார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்கு அதிபதியாக விளங்கி வருகிறார் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார் செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணம் செய்து வந்தார்.
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்த ராசியான தனுசு ராசியில் நுழைந்தார். வலிமையின் காரணியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்டு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர் அது எந்தெந்த ராசிகள் என்பது தெரிந்து கொள்ளலாம்.
துலாம் ராசி
உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் மூன்றாம் வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். அதிக லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் விலகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் இனிமையான பொழுது உண்டாகும்.
தனுசு ராசி
உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மேஷ ராசி
செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார் உங்களது வாழ்க்கையில் அதிர்ஷ்டமான சூழ்நிலை உருவாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பணவரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.