உடனே விண்ணப்பீங்க : பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்..!
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் லக்பதி திதி யோஜனா என்ற பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கான திறன் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் செய்யும் திறன் வளர்க்கப்படுகிறது. இதனுடன் இத்திட்டத்தின் மூலமாக தங்களை பொருளாதார ரீதியாக வலிமையாகிக் கொள்வதற்காக கடன் உதவி வழங்கப்படுகிறது. 18 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கடனுதவி பெற முடியும்.
லக்பதி திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் சந்தை தேவைக்கேற்ப பொருட்களை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.பெண்கள் தங்கள் சுயதொழில் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை துறைசார் விற்பனை நிலையங்கள் மற்றும் கண்காட்சிகளில் விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் அவர்களின் வருமானம் உயர்கிறது.
பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது, வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்ட நோக்கங்களை மையமாகக்கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.18 முதல் 50 வயதுக்குட்பட்ட கிராமப்புற பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இந்த திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்றால், லக்பதி யோஜனா இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். இதுவே ஆஃப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சுய உதவி குழு உறுப்பினர் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம்