இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்கள்… என்னென்ன வசதிகள் எதிர்பார்க்கலாம்..?
எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டத்திருந்து இந்தியாவின் போக்குவரத்து முற்றிலும் மாற்றமடைந்துள்ளது. பேட்டரியில் இயங்கும் இந்த வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருப்பதோடு, எரிபொருளுக்கு ஆகும் செலவையும் குறைக்கிறது.
தினமும் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்து வரும் வேளையில் பொது இடங்களில் அதிகமான சார்ஜிங் நிலையங்கள் இருக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமும் எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஆர்வம் மக்களிடம் அதிகரித்து வரும் வேளையில் பொது இடங்களில் அதிகமான சார்ஜிங் நிலையங்கள் இருக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க உள்ள பலன்கள்: தற்போது இந்தியாவில் உள்ள 807 நகரங்களில் மொத்தமாக 9388 சார்ஜிங் நிலையங்கள் உள்ளன. இந்த நிலையங்களின் அமைவிடத்தை எலெக்ட்ரிக் வாகனத்தில் உள்ள நேவிகேஷன் சிஸ்டத்தின் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஒருவேளை உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தில் அந்த வசதி இல்லையென்றால், கூகுள் மேப்பில் சார்ஜிங் நிலையத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமான பெட்ரோல், டீசல் அல்லது சிஎன்ஜி கார்களின் எரிபொருள் நிலையங்கள் போல் இல்லாமல், எலெக்ட்ரிக் வாகன்ங்களின் சார்ஜ் நிலையங்களில் எந்தவொரு ஊழியர்களும் இருக்க மாட்டார்கள். அப்படியென்றால் வாடிக்கையாளராகிய நாம்தான் நம்முடைய வாகனங்களுக்கு சார்ஜ் போட்டுக்கொள்ள வேண்டும். ஆகையால் இதுகுறித்த அடிப்படையான தொழில்நுட்ப விஷயங்களை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது. இதற்கான கட்டணத்தை நீங்கள் செயலி மூலம் செலுத்தும் வசதியும் இந்த நிலையங்களில் உள்ளது.
எலெக்ட்ரிக் வாகனம் வைத்திருப்பவர்கள் தங்களது வாகனத்தின் பேட்டரி திறனை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து சார்ஜிங் நிலையங்களிலும் AC மற்றும் DC சார்ஜர்கள் இருக்குமா என சொல்ல முடியாது. வேகமாக சார்ஜ் ஏற வேண்டுமென்றால் அதற்கு DC சார்ஜர் தேவைப்படும். அதுவே சிறிய பேட்டரிகள் என்றால் AC சார்ஜரே போதுமானது. இதன் திறன் 25-40kWh என்ற அளவில் இருக்கும். ஒருவேளை உங்கள் வாகனத்திற்கு அதிகபட்சம் 7.2kW சார்ஜ் தான் ஏற்ற முடியும் என்றால், அதை AC சார்ஜர் மூலமே செய்துகொள்ள முடியும்.
அடுத்ததாக தங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு என்ன மாதிரியான சார்ஜிங் ப்ளக் பயன்படுத்த வேண்டும் என்பதை கார் உரிமையாளர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் பயணிகள் வாகனங்களுக்கு டைப் 2 AC சார்ஜிங் ப்ளக் பயன்படுத்தபடுகின்றன. விரைவாக சார்ஜ் ஏற்றுவதற்கு நவீன வசதி கொண்ட CCS டைப் 2 ப்ளக் பயன்படுத்தபடுகின்றன.
நம் நாட்டில் சில குறிப்பிட்ட வர்த்தக எலெக்ட்ரிக் வாகனங்களில் CHAdeMO சார்ஜிங் கனெக்ஷன் உள்ளது. இவற்றுக்கு பிரத்யேகமான சார்ஜிங் நிலையங்கள் தேவைப்படும். இந்தியாவில் டோக்கியோ எலெக்ட்ரிக் பவர் நிறுவனம் ஐந்து ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களோடு இணைந்து இதை அறிமுகப்படுத்தியுள்ளது.