இது தெரியுமா ? மருதாணி இலையை அரைத்து உள்ளங்காலில் வைப்பதால்…

ருதாணி என்பது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை, உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது.

இதை கைகளில் வைக்கும் போது, உடல் குளிர்ச்சியடைந்து, மனம் மகிழும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. மருதாணி இலையை அரைத்து வைக்கும்போது வீசும் வாசத்துக்கு, நேர்மறையானகதிர்கள் இருப்பதால், அவை நம் மனதுக்குள் செல்கிறது.

ரசாயன கலவைகளை தவிர்த்து, இயற்கையான மருதாணி இலையை பயன்படுத்துவது உடலுக்கும், உள்ளத்துக்கும் நல்லது. மருதாணியை அரைத்து கைகள் மற்றும் உள்ளங்காலில் வைப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நிகழ்வுகள், நம் உடலுக்குள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று, அழகுக்காக கை, கால்களில் மருதாணி இட்டுக் கொள்வது.

முற்காலத்தில் மருதாணி மரத்தின் இலையை அரைத்து நேரடியாக பயன்படுத்தி வந்தனர். தற்போது அதே இலைகளை உலர்த்தி பதப்படுத்தியும், பலவகைகளில் பயன்படுத்துகின்றனர். பச்சை இலைகளை அரைத்து, நேரடியாக மருதாணி இட்டுக் கொள்வது மிகவும் நல்லது. அதே இலைகளை நிழலிலேயே உலர்த்தி பொடி செய்து மெல்லிய துணியால் சலித்து சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் தேவையான நேரத்தில், மருதாணி பேஸ்ட் தயாரிக்கலாம். முதலில் பேப்பரில் கோன் போல் செய்து, அல்லது கைகளில் உங்களுக்கு தெரிந்த டிசைன்களை கோலம் போடுவது போல் போட்டு, பயிற்சி பெற வேண்டும்.

பயன்கள்: மருதாணி இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. மருதாணி மலர்கள், வெண்மை, இள மஞ்சள், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும். மருதாணி இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகளை குணமாக்கும்.

மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.மருதாணி இட்டுக் கொள்வதால் சிலருக்கு சளி பிடித்துவிடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும்போது கூடவே 8 நொச்சொ இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம்.

மருதாணி இலைகளை அரைத்து பாதங்களில் வைத்துக் கட்டுவது சிறந்த முறையாக கருதப்படுகிறது. இதற்கு, மருதாணி இலையை அரைத்து, உள்ளங்காலில் வைக்க வேண்டும். அப்போது, கால் நரம்புகளில் மசாஜ் செய்தது போல், உடலின் அனைத்து பாகங்களும் புத்துணர்வடையும். மருதாணி இலையை அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச கொப்புளங்கள் தீக்காயங்கள் குணமாகும்.

மருதாணி இலைகளை அரைத்து அடை போன்று தட்டையாகத் தட்டி நிழலில் உலர்த்திக் கொள்ள வேண்டும். இதை வெயிலில் உலர்த்தி, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி எடுத்து, அந்த எண்ணெயை தலையில் தடவி வரவேண்டும். இதனால் இளநரை மாறுவதுடன் கண்கள் குளிர்ச்சி அடையும். நல்ல தூக்கம் உண்டாகும்.

மனிதர்களின் மேற்புற தோல் மிகவும் மென்மையானது. தோலில் தீக்காயம் ஏற்பட்டால் தோலில் பாதிப்புகளை ஏற்படுத்தி அது ஆறும் போது தழும்புகளை உண்டாக்குகிறது. தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ச்சி தன்மை மிகுந்த மருதாணி இலையை அரைத்து பூசி வந்தால், காயத்தில் இருக்கும் எரிச்சல் தன்மை மற்றும் வலி குறையும். காயம் சீக்கிரம் ஆறுவதுடன் அழுத்தமான தழும்புகள் ஏற்படுவதை தடுக்கும்.

தலை என்பது உடலின் பிரதானமான உறுப்பு. தலையில் எந்த வகை பாதிப்பு ஏற்பட்டாலும் அது நம்மை வேறு எதிலும் கவனம் கொள்ளமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. சிலருக்கு ஜுரம் போன்றவற்றால் தலைவலி ஏற்படுகிறது. மைக்ரேய்ன் எனப்படும் ஒற்றை தலைவலியும் உண்டாகிறது. மருதாணி இலைகளை நன்கு அரைத்து தலைவலி ஏற்படும் போது நெற்றியில் தடவி வந்தால் எப்படிப்பட்ட தலைவலி பிரச்சனைகளும் தீரும்.

பெண்கள் அடிக்கடி தங்களின் கைகளில் மருதாணி இலைகளை அரைத்து இட்டுக்கொள்வதால் கைகளில் இருக்கும் முரட்டு தன்மை நீங்கி கைகள் மிருதுவாகும். உடல் அதிகம் உஷ்ணமாவதை தடுக்கும். மன அழுத்தங்களை குறைக்கும். மருதாணியை விரல்களின் நகங்களின் மீது இட்டுக்கொள்வதால் நகசுத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

நரம்புகள் பாதிப்பு மற்றும் மன அழுத்தங்கள் அதிகரிப்பதால் சிலருக்கு தூக்கமின்மை பிரச்சனை உண்டாகி பல விதங்களில் அவர்களின் உடல், மன ஆற்றலை குறைகிறது. மருதாணி இலையில் இருந்து பெறப்பட்ட மருதாணி எண்ணையை தலைக்கு அடிக்கடி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணத்தை தணித்து, நரம்புகளை குளிர்ச்சியாக்கி தூக்கமின்மை பிரச்சனை நீங்குகிறது.

உடலில் சில பாகங்களில் சமயத்தில் சுளுக்கு ஏற்பட்டு அந்த இடம் வீங்கி விடுகிறது. வாதம் சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்களுக்கும் உடலின் மூட்டு பகுதிகளில் விறைப்பும், வீக்கமும் ஏற்படுகின்றன.மருதாணி இலைகளில் இருந்து பெறப்படும் எண்ணையை வீக்கம் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவி வருபவர்களுக்கு வீக்கங்கள் விரைவில் வற்றும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *