மாத்ரு காரகரும் மனோகாரகரும் இணைந்தால்? 100 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் கேது-சந்திரன்!
கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் உலகில் அனைத்திலும் மாற்றங்கள் வரும், அவற்றில் நன்மையும் தீமையும் அவரவர் ஜாதகத்திற்கு ஏற்றாற் போல மாறும். இன்னும் சில நாட்களில் கேதுவும் சந்திரனும் ஒரே வீட்டில் வந்து இணைவது என்பது, ஜோதிட ரீதியாக பலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஹோலி பாண்டிக்கையன்று சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. மனோக்காரகர் என்றழைக்கப்படும்.சந்திரன், ஞானக்காரகரான கேதுவுடன் இணைவது பொதுவாக நல்ல பலன்களைக் கொடுப்பதில்லை. இதற்கு காரணம் என்ன?
சந்திரன் இரட்டை நிலை பண்பு கொண்வர், அதாவது, வளர்பிறை.தேய்பிறை என்ற இரண்டு நிலைப்பாடு கொண்டவர். வளர்பிறை தேய்பிறைக்கு ஏற்றாற்போலத் தான் சந்திரன் பலன் தருவார். நமது மனதில் மாறி மாறி எண்ணங்கள் வருவதற்கும் சந்திர கலைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. மனதை ஒட்டியே நாம் செய்யும் செயல்கள் இருக்கும் என்பதைப் போல, சந்திரனின் நிலையை வைத்தே மனதின் எண்ணங்கள் உருவாவதாக நம்பிக்கை உண்டு.
சந்திரனை அடிப்படையாகக் கொண்டு தான் ஜாதகத்தில் ராசி கணக்கிடப்படுகிறது. சந்திரனுடன் கெட்ட கிரகங்கள் இணைவது ஆக்கப்பூர்வமானதாக பார்கக்ப்படுவதில்லை. முக அழகு, லாபம் என பல விஷயங்களுக்கு சந்திரன் தான் காரணமாகிறார். ஆனால் சந்திரன் எட்டில் அமர்ந்தால் வாழ்க்கை சோதனை ஆகிவிடும். ஏழில் தனித்து அமர்ந்தால் காதல் திருஅணம் நடத்திக் கொடுக்கும் சந்திரன், இன்பத்தில் லயிக்கச் செய்து சுகம் காண வைக்கும் தன்மை படைத்தவர்.
ஆனால், சந்திரனுக்கு மாறாக, ஒருவரின் தனித்தன்மையை முடிவு செய்பவர் கேது பகவான். ஜாதகத்தில் கேது அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்தே ஒருவரின் அறிவும் ஞானமும் முடிவாகும். வாழ்க்கையில் அறிவு சம்பந்தமான முடிவுகளை எடுக்க வைக்கும் கேதுவும், மாத்ரு காரகன் சந்திரனும் இணைவது என்பது பலருக்கு தீமையான பலன்களைக் கொடுக்கும்.
பொதுவாக, சந்திரனும் கேதுவும் இணைந்திருந்தால் அது வாழ்க்கையை கஷ்டமானதாக்கும் என்பது நம்பிக்கை. இந்த இணைவு ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால், அவர் ஆன்மீகட்த்தில் ஈடுபட்டால் எளிதில் அதனுள் சென்று பல விஷயங்களை அறிந்துக் கொள்ளும் யோகம் ஏற்படும். முன்கூட்டியே பல விஷயங்களை தெரிந்துக் கொள்ளும் அறிவு இருக்கும்.
அதேபோல, தெய்வ தரிசனமும் குருவின் ஆசிகளும் எளிதில் கிடைக்கும் என்றால், குடுமப் வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள், விரக்தியாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாமல் விரக்தி மற்றும் வெறுப்புடன் வாழும் நிலை ஏற்படும். இது, வாழ்க்கையில் கசப்பையே ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை.
விரக்தியாக ஒருவர் இருக்கும்போது, அவரின் மன எண்ணங்களை கேது மேலும் ஆழப்படுத்துவார். தனிமையில் இருக்க விருப்பம் ஏற்படும், இது பல உறவுகளை பகைமையாக்கும். நோய் நொடி, குடும்பத்தில் குழப்பம் என பல்வேறு பிரச்சனைகளை சந்திரன் மற்றும் கேது இணைந்தால் ஏற்படலாம்.
ராகு கேதுவின் இயக்கம் யார் வாழ்க்கையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத் தான் பலரும் பேசுவார்கள், ஆனால், சந்திரனுடன் எந்த கிரகம் இணைந்தாலும் அதன் தாக்கமும் மிகவும் வீரியமானதாக இருக்கும். தற்போது, சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கேதுவும் சந்திரனும் இணைகின்றனர். இது பலரின் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும்.