புதன் பெயர்ச்சி: இன்னும் 6 நாட்களின் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்

புத்திசாலித்தனம், அறிவாற்றல், பேச்சாற்றல், நட்பு, அழகு ஆகியவற்றின் காரணி கிரகமான புதன் மார்ச் 26ம் தேதி அதிகாலை 3.05 மணிக்கு மேஷ ராசியில் பிரவேசிக்க உள்ளார். புதன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சிலருக்கு நல்ல பலன்களும் சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சியால், தொழில், வியாபாரத்தில் அற்புதமான பலன்கள் கிடைக்கும். 12 ராசிகளிலும் (Zodiac Signs) புதன் பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காண்லாம்.

மேஷம்:புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித வசதிகள் பெருகும். வாழ்வில் அதிக புகழும் மரியாதையும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாக இருக்கும். பொருளாதார பிரச்சனைகள் இருக்காது.

ரிஷபம்: புதன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பலன் தரும். இந்த நேரத்தில், உங்கள் வசதிகளை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்ப உறவுகள் வலுவடையும். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வாழ்க்கைத்துணையின் அன்பு அதிகரிக்கும். புதன் பெயர்ச்சியால் சுப பலன்கள் அதிகரிக்கும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி லாபகரமானதாக இருக்கும். இந்த காலத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். இந்த காலத்தில் லாபம் அதிகரிக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

கடகம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் நல்ல பலன்கள் உருவாகும். கடக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும், வாழ்வில் அமைதி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான அன்பும் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

சிம்மம்: புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்கார்ரகளுக்கு கலவையான பலன்களை அளிக்கும். இந்த காலத்தில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த அளவு பலன் கிடைக்காமல் போகலாம். யாருக்காவது ஏதாவது வாக்குறுதி அளித்திருந்தால் அதை நிறைவேற்றுவதில் நீங்கள் பின்வாங்கக் கூடாது.

கன்னி: புதன் பெயர்ச்சியால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். உங்கள் அறிவுத்திறன் வலுவாக இருக்கும். வீட்டில் மங்களகரமான சூழ்நிலையை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சியின் தாக்கம் நல்ல பலன்களை அளிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும், குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் இந்த கலாத்தில் பல சாதனைகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சு மிகவும் செல்வாக்கு செலுத்தும். உங்கள் பேசாற்றலால் அதிக மக்களை ஈர்ப்பீர்கள். மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அட்டகாசமாக இருக்கும். புதனின் சஞ்சாரத்தால் நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிறர் உங்கள் வார்த்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். உங்கள் குழந்தை மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். பண வரவு அதிகமாகும்.

மகரம்: புதன் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு சில பிரச்சனைகளை கொண்டு வரும். நிதி நிலையும் நன்றாக இருக்காது. இந்தக் காலகட்டத்தில் எங்கும் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். குடும்ப மகிழ்ச்சியை பராமரிக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். அனைத்து பணிகளிலும் கவனமாக நடந்துகொள்வது நல்லது.

கும்பம்: புதன் பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடனான உறவுகள் மேம்படும். உங்களின் பணியில் சகோதர சகோதரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் முன் தைரியமாக வெளிப்படுத்தலாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்: புதனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வரும். வியாபாரம் நன்றாக நடக்கும். பணி இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பண விஷயத்தில் உங்கள் நிலைமை நன்றாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் அறிவுத்திறன் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *