15 நாட்களில் தொப்பை கொழுப்பு மாயமாய் மறைய தினமும் காலையில் இதை பண்ணுங்க போதும்
உடல் பருமனால் தொல்லையா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. இன்றைய உலகில் உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இதை சரி செய்ய மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள், பல வித கடினமான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால், இவற்றுக்கு மத்தியில் சில அடிப்படை விஷயங்களை மறந்து விடுகிறார்கள்.
நம்முடைய காலை பழக்கங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. எடை இழப்புக்கான முயற்சிகளை செய்ய காலை நேரம் மிக முக்கியமான நேரமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். விரைவாக உடல் எடையை குறைக்க சில பயனுள்ள, இயற்கையான, நம்மால் தொடரக்கூடிய முறைகளை பின்பற்றுவது எப்போதும் நன்மை பயக்கும்.
பலர் தங்கள் உடலில் உள்ள கொழுப்பை, குறிப்பாக தொப்பை கொழுப்பை (Belly Fat) குறைக்க விரும்புகிறார்கள். ஆனால் இதற்கான சரியான முறை பற்றி தெரியாததால், இவர்களால் இதை செய்ய முடிவதில்லை. சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை விரைவாக செய்யலாம். குறுகிய காலத்தில் சுமார் 10 கிலோ எடையை குறைப்பது உங்கள் நோக்கமாக இருந்தால், அதற்கான ஒரு எளிய வழிமுறை உள்ளது.
இந்த செயல்முறையை காலையில் பின்பற்றி வந்தால், உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, காலையில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். எடை இழக்கும் செயல்பாட்டில் கட்டுப்பாடு, நிலைத்தன்மை மற்றும் பொறுமை ஆகியவை முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக கலோரிகளை எரிக்கவும், விரைவாக உடல் எடையை குறைக்கவும் (Weight Loss) காலையில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
காலையில் முதல் வேலையாக உடற்பயிற்சி (Exercise) செய்வது நல்லது. நடைபயிற்சி, யோகா ஆசனங்கள் அல்லது லேசான பிற உடற்பயிற்சிகளை செய்வது உங்கள் உடலில் உள்ள ஆற்றலைத் தூண்டி, நால் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
தண்ணீர்
காலை எழுந்தவுடன் வெந்நீரில் (Water) எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கத் தொடங்குங்கள். இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இது கலோரிகளை வேகமாக குறைக்கவும் உதவும்.
காலை உணவு
ஆரோக்கியமான காலை உணவை (Breakfast) உட்கொள்ள வேண்டும். காலை உணவு உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் அவ்வப்போது ஏற்படும் பசியையும் குறைக்கிறது. இதனால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. காலை உணவில் புரதம், நார்ச்சத்து மற்றும் சத்தான உண்வுகளை சேர்க்க வேண்டும்.
எலுமிச்சை பாணம்
நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது முக்கியம். எனினும், தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை (Lemon Water) குடிப்பது எடையை விரைவாக குறைக்க உதவும்.
இஞ்சி தண்ணீர்
காலை வேளைகளில் வெந்நீரில் இஞ்சி சாறு கலந்து குடிப்பதால், வளர்சிதை மாற்றம் துரிதப்படுத்தப்படும். இது தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் சூடான இஞ்சி (Ginger) தண்ணீர் குடிக்கலாம்.
போதுமான அளவு உறக்கம்
தினமும் இரவில் போதுமான தூக்கம் (Sleep) இருப்பது மிக அவசியமாகும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவும். சரியான அளவு உறக்கம் விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது.