நரம்பு தளர்ச்சி முதல் மூட்டு வலி வரை… மாயங்கள் செய்யும் கசகசா..!
கசகசா என்னும் மசாலா ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. கசகசா ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும். நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி6 மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ள கசகசா பல நோய்களில் இருந்து உங்களை காக்கும். கசகசாவை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நோய் முதல் நீரிழிவு, இதய நோய்கள் என பல்வேறு வகையான உடல் நல பிரச்சனைகளில் (Health Tips) இருந்து விடுபடலாம்.
நரம்பு தளர்ச்சியை நீக்கும் கசகசா
கசகசா மூளைக்குச் செல்லும் நரம்புகள் மற்றும் ரத்த செல்களின் வேகத்தை சீராக்க்கும் திறன் பெற்றது. மூளையின் நரம்பு செல்கள் தூண்டப்படுவதால், மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அதனால் குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிப்பதற்கு கசகசாவை பாலில் கொதிக்க வைத்து கொடுப்பது நல்ல பலன் அளிக்கும். நரம்பு தளர்ச்சி உள்ள பெரியவர்களும், கசகசா பாலை அருந்துவதால், நல்ல பலன் கிடைக்கும்
கசகசாவில் அதிக அளவிலான கால்சியம் மற்றும் தாமிர சத்து இருக்கிறது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கியம். வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க கசகசாவை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இது, எலும்புகளை மட்டுமின்றி எலும்புகளுக்கு இடையே உள்ள இணைப்புத் திசுக்களையும் வலுப்படுத்தும். இதனால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கசகசா
கசகசாவில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. தீங்கு விளைவிக்கும் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும், உடலில் HDL என்னும் நல்ல கொலஸ்டிரால் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. கசகசாவில் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. எனவே, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமகா வைக்கிறது. கசகசாவை உட்கொள்வது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மேலும் இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், இதய நோய்களின் ஆபத்தை பெருமளவு குறைக்கும்.
தூக்கமின்மையை போக்கும் கசகசா
தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் இரவில் கசகசா பல அருந்துவதால், நல்ல பலன் கிடைக்கும். மன அழுத்தத்தை குறைத்து, மனதை அமைதிப்படுத்தி, பதட்டத்தை குறைக்க உதவும் கசகசா, நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் கசகசா
நம்முடைய நோய் திர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வைட்டமின் சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஜிங்க் சத்தும் மிக மிக முக்கியம். கசகசாவில் ஜிஙக் சத்து அதிக அளவில் இருக்கிறது. இதனை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
தைராய்டு பிரச்சனை போக்கும் கசகசா
தைராய்டு சுரப்பிக்கு ஜிங்க் என்னும் துத்தநாக சத்து மிகவும் முக்கியமானது. இது தைராய்டு ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது. எனவே, தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் துத்தநாகம் நிறைந்த கசகசாவை தாராளமாக உட்கொள்ளலாம்.
வாய் புண்களை போக்கும் கசகசா
வாய் புண் அடிக்கடி ஏற்பட்டால் கசகசாவை சாப்பிடலாம். பாக்டீரியா எதிர்ப்புத் தன்மையைத் தவிர, கசகசா குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இது வாய் புண்களைக் குணமாக்க உதவுகிறது. எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்கிறது.
கச்கசாவை சாப்பிட சிறந்த வழி
எனவே, கசகசாவின் நன்மைகள் அனைத்தையும் பெற, நீங்கள் இரவில் பாலில் அரைத்து வேக கொதிக்க வைத்த கசகசாவை சாப்பிட வேண்டும். இது எல்லா வகையிலும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.