IPL 2024: CSK vs RCB 1st Match: சிங்கம் போன்று கர்ஜித்த தோனி – வைரலாகும் வீடியோ!

ஐபிஎல் தொடர் வரும் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். தோனியை எப்போது பார்ப்போம் என்று ஏங்குபவர்களும் ஏராளம். இந்த தொடர் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் 2 நாட்களில் சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணியும், ஒரு முறை கூட டிராபையை வெல்லாத ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கு முன்னதாக ஐபிஎல் தொடக்க விழா நடைபெறுகிறது. இதில், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், சோனு நிகம், அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இவர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து முறையாக தகவல் ஏதும் இல்லை.

சிஎஸ்கே அணியின் தொடக்க வீரரான டெவோன் கான்வே காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. தோனியின் செல்லப்பிள்ளையான மதீஷா பதிரான காயம் காரணமாக இந்த சீசனில் இடம் பெறுவது குறித்து கேள்வி எழுந்துள்ளது. அவர் குணமடைய கிட்டத்தட்ட 4 வாரங்கள் ஆகும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியிருக்கிறது. இதே போன்று முஷ்தாபிகுர் ரஹ்மான் காயம் அடைந்த நிலையில், காயம் சரியான நிலையில் உடனடியாக அணிக்கு திரும்பியுள்ளார்.

https://twitter.com/BalveerDoodhwal/status/1770303198143856899

இந்த நிலையில் தான், தோனி சிங்கம் போன்று கர்ஜித்து டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ருதுராஜ் கெய்க்வாட் உடன் தோனி டான்ஸ் ஆடியுள்ளார். ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ரிலாக்‌ஷாக டான்ஸ் ஆடி மகிழ்ந்துள்ளார்.

சிஎஸ்கே விளையாடும் போட்டிகள்:

மார்ச் 22 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி

மார்ச் 26 – குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி

மார்ச் 31 – டெல்லி கேபிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் – விசாகப்பட்டினம் – இரவு 7.30 மணி

ஏப்ரல் 05 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ஹைதராபாத் – இரவு 7.30 மணி

ஆர்சிபி விளையாடும் போட்டிகள்:

மார்ச் 22 – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சேப்பாக்கம் – இரவு 7.30 மணி

மார்ச் 25 – பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி

மார்ச் 29 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி

ஏப்ரல் 02 – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – பெங்களூரு – இரவு 7.30 மணி

ஏப்ரல் 06 – ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ஜெய்ப்பூர் – இரவு 7.30 மணி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *