முகேஷ் அம்பானியின் 5 லட்சம் சதுர அடி Jio World Garden; ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா?
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் வடிவமைக்கப்பட்டுள்ள Jio World Garden இன் ஒரு நாள் வாடகை விலை தெரியவந்துள்ளது.
முகேஷ் அம்பானி
இந்தியாவின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி கருதப்படுகிறார்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் தொழில்கள், மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக அடிக்கடி வைரலாகிக் கொண்டு இருப்பார்கள்.
அம்பானி குடும்பம் இந்தியாவின் பணக்காரக் குடும்பம் மற்றும் ஆண்டிலியா என்று அழைக்கப்படும் ரூ. 15000 கோடி மதிப்புள்ள வீட்டில் வசித்து வருகின்றார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான Jio World Garden குறித்து ஒரு சில தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது.
Jio World Garden
மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தின் மையப்பகுதியில் இந்த Jio World Garden அமைந்துள்ளது. இது 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த Jio World Garden சர்வதேச மாநாட்டு மையம், உயர்தர ஹோட்டல்கள், சொகுசு வணிக வளாகங்கள், அதிநவீன கலை அரங்கம், சினிமா, வணிக அலுவலகங்கள் மற்றும் தடையற்ற Wi-Fi இணைப்பு உள்ளிட்ட பல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு சுமார் 2,000 வாகனங்களை நிறுத்தி வைக்குமளவுக்கு வாகன தரிப்பிடம் இருக்கிறது.
Lakme Fashion Week, Arijit Singh Concert, Ed Sheeran Concert மற்றும் JioWonderland போன்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறது.
Jio World Garden வாடகைக்கு கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இது ஒரு நாளைக்கு ரூ. 15 லட்சம் வரை பணத்தை அறவிடுகிறது. இதற்கு வரிகள் ஏதும் இல்லை.
இந்த இடம் பல உயர்மட்ட நிகழ்வுகளை நிகழ்த்துவதற்காகவும் கௌரவத்தின் சின்னமாக கருதப்படுகிறது.
மேலும் முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி இந்த இடத்தில் தான் ஷ்லோகா மேத்தாவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.