நயன்தாரா முதல் செலினா கோம்ஸ் வரை.. பிஸ்னஸில் பெரும் தடுமாற்றம்..!!

நயன்தாரா முதல் கிம் கார்தாஷியன், ரிஹானா வரையில் பலரும் பியூட்டி பிராண்டுகளை வைத்திருந்தாலும், சமீப கால பல பிரபலங்களின் தயாரிப்புகள் மார்கெட்டில் விலை போகாமல் மாட்டிக்கொண்டு உள்ளது.

இந்த நிலையில் நடிகையும் பாடகியுமான செலினா கோம்ஸ் தனது அழகுசாதன நிறுவனமான ரேர் பியூட்டி நிறுவனத்தை மதிப்பிடுவதற்காக ஆலோசகர்களை நியமித்துள்ளார்.

ரேர் பியூட்டி, முதலீடு செய்ய விரும்பும் அல்லது நிறுவனத்தை விலைக்கு வாங்க பல முதலீட்டாளர்களை முதலீட்டு வங்கியாளர்கள் ஈர்த்து வந்தனர். ஆனால் செலினா கோம்ஸ் கொடுக்கப்பட்ட மதிப்பீடு மற்றும் தொகையின் மீது விருப்பம் இல்லாமல் ஏற்கவில்லை. 31 வயதான கோம்ஸ், பேஷன் வணிகத்தில் தொடர்ந்து தற்போது இருக்கும் முதலீட்டாளர் உடன் தொடர முடிவு செய்துள்ளார்.

பேஷன் பிரிவில் பிரபலமான வலைத்தளமான தி பிசினஸ் ஆஃப் ஃபேஷன், செலினா கோம்ஸ்-ன் ரேர் பியூட்டி பிராண்டை 2 பில்லியன் டாலர் அளவுக்கு மதிப்பிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான மிகவும் விரும்பப்படும் நிறுவனமாக ரேர் பியூட்டி உள்ளது.

கோமஸ் மற்றும் அவரது குழுவினர் 2020 ஆம் ஆண்டில் ரேர் பியூட்டியை அறிமுகப்படுத்தினர், குறைந்த கருவிகளுடன் பயன்படுத்தக்கூடிய திரவ அழகுசாதனப் பொருட்களில் கவனம் செலுத்தினர். இந்நிறுவனத்தின் ப்ளஷ் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த ஆண்டே டிக்டாக்கில் வைரலானது. இதன் மற்ற பிரபலமான தயாரிப்புகளில் ஹைலைட்டர் காம்பாக்ட் அடங்கும்.

ரேர் பியூட்டி பேக்கேஜிங் பயன்படுத்த எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோம்ஸ், ரிஹானா மற்றும் ஹெய்லி பீபர் ஆகியோர் பியூட்டி பொருட்கள் தொழில்துறையில் வென்ற ஏ-லிஸ்டர்களில் உள்ளனர், மற்ற பிரபலங்கள் தடுமாறி வருகின்றனர்.

கோம்ஸ் பாடும் தொழிலைத் தொடங்குவதற்கு முன் டிஸ்னி சேனலில் ஹிட் ஆனார். அவர் குழந்தை நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

குழந்தைகள் தொலைக்காட்சி தொடரான பார்னி & பிரண்ட்ஸ் (2002-2004) இல் நடித்தார். டிஸ்னி சேனல் சிட்காம் விஸார்ட்ஸ் ஆஃப் வேவர்லி பிளேஸில் (2007-2012) அலெக்ஸ் ருஸ்ஸோவாக தனது முன்னணி பாத்திரத்தில் கோம்ஸ் பிரபலமடைந்தார்.

இன்ஸ்டாகிராமில் அவருக்கு 430 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இது சமூக ஊடக தளத்தில் அதிகம் பின்தொடரும் டாப் 10 கணக்குகளில் அவரை தரவரிசைப்படுத்துகிறது. இதனால் செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமின் ராணி என்று அழைக்கப்படுகிறார்.

கோம்ஸ் தனது புராஜக்ட்களை சந்தைப்படுத்தவும், திட்டங்களை விளம்பரப்படுத்தவும், மன ஆரோக்கியத்தைப் பற்றி பேசவும், பிற வணிக முயற்சிகளுக்கு பயனளிக்கவும் தனது பாலோயர்களை இன்புளுவன்ஸ் செய்கிறார்.

2022 ஆம் ஆண்டில் $100 மில்லியன் மதிப்புடைய மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் Wondermind என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை அவர் இணைந்து நிறுவினார். Netflix Inc. மற்றும் Warner Bros. Discovery Inc. நிகழ்ச்சிகளில் நிர்வாக தயாரிப்பாளராகவும் கோம்ஸ் பணியாற்றினார். Puma SE போன்ற பிராண்டுகளுடன் கூட்டு வைத்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *