பல சண்டை.. தந்தை விஜய்பட் சிங்கானியா சந்தித்த ரேமண்ட் கௌதம் சிங்கானியா.. டிரெண்டிங் போட்டோ..!!
இந்திய வர்த்தக துறையில் சில மாதங்களுக்கு முன்பு பெரும் பேசுபொருளாக இருந்தது ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் சிங்கானியா மற்றும் அவருடைய மனைவி நவாஸ் மோடி மத்தியிலான விவாகரத்தும், நவாஸ் மோடி கேட்ட 75 சதவீத சொத்து ஜீவனாம்சம் கோரிக்கை தான்.
இது மட்டும் அல்லாமல் ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கௌதம் சிங்கானியா-வுக்கும் அவரது தந்தை, சகோதரர், குடும்பத்திற்கு மத்தியில் பல ஆண்டுகளாகப் பிரச்சனை இருந்து வரும் வேளையில், கௌதம் சிங்கானியா டிவிட்டரில் பதிவிட்ட ஒரு போட்டோ ஒட்டுமொத்த வர்த்தக துறையைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சனை தொடர்பாகத் தந்தை விஜய்பட் சிங்கானியா, தனது மகன் கௌதம் சிங்கானியா மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது மகன் தன்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.
தனக்கு ஒரு வீடு கூட கொடுக்கவில்லை என்றும், பெற்றோர்களே பிள்ளைகளுக்கு உங்களுடைய சொத்துக்களைக் கொடுக்கும் முன்பு கொஞ்சம் யோசித்து கொடுங்கள், அனைத்து சொத்துக்களையும் கொடுத்துவிடாதீர்கள் என்றும் அறிவுரை கூறினார்.
ரூ. 11539 கோடி சந்தை மதிப்பைக் கொண்ட ரேமண்ட் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கௌதம் சிங்கானியா உள்ளார். மனைவி, குழந்தைகளை அடித்துத் துன்புறுத்திய பின்பு அவர்கள் அனைவரும் நீதா அம்பானி உதவியுடன் வெளியேறிய பின்னர் தற்போது 16 மாடி வீட்டில் தற்போது தனி ஆளாக வசித்து வருகிறார் கௌதம் சிங்கானியா.
2017 ஆம் ஆண்டு, தென் மும்பையில் உள்ள ஜே.கே ஹவுஸ் கட்டிடத்தின் இரு குடியிருப்புகளை ரேமண்ட் நிறுவனம் தனக்கு தரவில்லை என விஜய்பட் சிங்கானியா குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், 58 வயதான கௌதம் சிங்கானியா, கடந்த நவம்பர் 2023 இல் தனது மனைவி நவாஸ் மோடியிடம் இருந்து பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து, தனது சொத்துக்களில் 75 சதவீதத்தை தனக்கு வழங்க வேண்டும் என நவாஸ் மோடி கோரிக்கை வைத்த நிலையில் இந்த வழக்கு தற்போது நடந்து வருகிறது.
தற்போது, கௌதம் சிங்கானியா தனிமையில் இருப்பது மட்டும் அல்லாமல் விவாகரத்து வழக்கில் சிக்கி இருக்கிறார். கௌதம் சிங்கானியா, நவாஸ் மோடி தம்பதியினருக்கு நிஹாரிகா மற்றும் நிசா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
1986 ஆம் ஆண்டு சிங்கானியா குடும்பத்தின் ஜே.கே குழுமத்தில் இணைந்த கௌதம் சிங்கானியா, பின்னர் 1990 ஆம் ஆண்டு ரேமண்ட் குழுமத்தில் இணைந்து தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.