வரலாற்று வெற்றி பெற்ற புடினுக்கு வாழ்த்து..உக்ரைனுடனான போர் நிலைப்பாடு குறித்து தெரிவித்த மோடி
ரஷ்யா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற விளாடிமிர் புடினுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
வரலாற்று சாதனை
உக்ரைனுக்கு எதிரான சண்டை 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் சூழலில், ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இதில் விளாடிமிர் புடின் (Vladimir Putin) 88 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
அதாவது, ரஷ்ய வரலாற்றில் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்ச்சியாக 3வது முறையாக ஜனாதிபதி தேர்தல் வென்ற இரண்டாவது நபர் புடின் ஆவார். இதற்கு முன்பு ஜோசப் ஸ்டாலின் இதனை செய்திருந்தார்.
மோடி வாழ்த்து
புடினுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துக்களை கூறின. அந்த வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ”புடினுக்கு தொலைபேசி மூலமா வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடி, ரஷ்யாவின் நட்பு நாடுகளின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யா – உக்ரைன் மோதல் குறித்தும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் மோடி பேசியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.