பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த இந்திய வம்சாவளி பிரதமர்

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லியோ வரத்கர்
அயர்லாந்து நாட்டின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் பிரதம மந்திரி லியோ வரத்கர் (Leo Varadkar) ஆவார்.

இந்திய வம்சாவளியான இவர் 2017 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலம் என இருமுறை பிரதமராக பதவி வகிக்கிறார்.

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்த இவை, 2018யில் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட கருக்கலைப்பு மீதான தடையை ரத்து செய்தார்.

ராஜினாமா
இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லியோ வரத்கர் அறிவித்துள்ளார். ”நான் பிரதமர் மற்றும் Fine Gael தலைமைப் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து வெளியிட்ட தனது அறிக்கையில், ‘நம் நாட்டை மிகவும் சமமான மற்றும் நவீனமான இடமாக மாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன். இப்போது பதவி விலகுவதற்கான எனது காரணங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல். எனக்கு வேறு எதுவும் வரிசையாக இல்லை, என் மனதில் எதுவும் இல்லை. என்னிடம் திட்டவட்டமான தனிப்பட்ட அல்லது அரசியல் திட்டங்கள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளார்.

இளம் வயது பிரதமர்
அத்துடன் பாராளுமன்றத்தின் ஈஸ்டர் இடைவேளைக்குப் பின்னர் புதிய பிரதமரை தெரிவு செய்ய அனுமதிக்கும் வகையில், ஏப்ரல் 6ஆம் திகதி கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனது கட்சியின் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் லியோ வரத்கர். 45 வயதாகும் லியோ வரத்கர் 2017யில் முதல் முறையாக பிரதமரானபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *