இது தெரியுமா ? மூலத்தினால் உண்டாகும் வீக்கத்தை போக்கும் துத்தி இலை..!

துத்தி இலை விதைகள், வேர், இலை, பூ, பழங்கள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டது. இதன் காய்கள் இனிப்புச்சுவை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. பல வகைகளில் இவை உள்ளது. இந்த துத்திக்கீரையை கொண்டு கூட்டு வைத்து சாப்பிடலாம்.இந்த துத்திக்கீரை இயற்கையான மலமிளக்கியாகக் செயல்படுவதால் மலச்சிக்கல் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மற்ற கீரைகளை போலவே, பருப்புகளில் சேர்த்து, நல்லெண்ணெய், சின்ன வெங்காயம் சேர்த்து கடைந்து சாப்பிட்டு வந்தாலே மூலநோய்கள் நம்மை அண்டாது..அல்லது மூல நோய் வந்தவர்கள், இந்த கீரையை சுத்தம் செய்து, கழுவி, விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில் ஒரு வாரத்துக்கு ஒரு டம்ளர் குடித்தாலே மூலநோய் குணமாகிவிடும். இந்த இலைகளை கழுவி அரைத்து கஷாயம் போல அல்லது சூப் போல வைத்து குடித்தாலும் மூலநோய் குணமாகும். மூலச்சூடும் நீங்கிவிடும். அல்லது இந்த இலையில் ரசம் வைத்து சாப்பிடலாம்.

ஆசன வாய் வீக்கம் இருந்தால் துத்தி இலைகளை ஆமணக்கு எண்ணெயில் சூடாக்கி, வீக்கம் உள்ள இடத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும். இது மூலத்தால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து விரைவில் நிவாரணம் தரும்

மலம் கட்டிகொண்டு இருந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கவும் ஆசன வாய் பகுதியில் ஏற்படும் எரிச்சல் குணமாகவும் இவை உதவும். துத்தி இலைகளை சிறிது தண்ணீரில் கொதிக்க வைக்கவும் இதனுடன் நாட்டு சர்க்கரை கலந்து குடிக்கலாம். பாலில் கலந்தும் குடிக்கலாம்.

எந்தவகையில் பயன்படுத்தினாலும், மூலத்தை விரட்டுவதில் முதன்மையானதாக துத்தி இலைகள் விளங்குகின்றன.. அதேபோல உஷ்ணம் சம்பந்தமான நோய்களையும் இந்த துத்தி இலைகள் விரட்டுகின்றன.. குறிப்பாக சிறுநீர் எரிச்சலை தணிக்கும் தன்மை இந்த இலைகளுக்கு உண்டு,.. குடல்புண்ணை ஆற்றும் சக்தி இந்த இலைகளுக்கு உண்டு.. உடலில் அதிக உஷ்ணம் சேர்ந்துவிட்டால், பசும்பாலுடன் இந்த துத்தி கீரையை பொடி செய்து கலந்து குடித்தாலே, மொத்த உஷ்ணமும் விலகிவிடும்.

அதிக உஷ்ணத்தால், பெண்களுக்கு கருப்பையில் கோளாறுகள் ஏதாவது ஏற்பட்டாலும், மாதவிடாய் பிரச்சனை ஏற்பட்டாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்பட்டாலும், இந்த துத்தி இலைகளை, நெய்யில் வதக்கி சுடுசாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.

பற்கள், ஈறுகள் வலுவாக இருக்க இயற்கை வைத்தியமாக துத்தி இலையை பயன்படுத்தலாம். துத்தி இலைகளை கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இறக்கவும். வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது கொப்பளிப்பதன் மூலம் ஈறுகள் பற்கள் வலுவாக இருக்கும். ஈறுகளில் இரத்தப்போக்கு இருக்கும் போது இதை செய்துவந்தால் கட்டுப்படும்.

ஆறாத புண்கள் இருந்தால் துத்தி இலைகளை நசுக்கி, அரைத்த இலைகளை மஞ்சள் மற்றும் புளியுடன் கலக்கவும். (வெளிப்புறப்பூச்சு மட்டும்) காயங்கள் மீது தடவி வந்தால் விரைவாக குணமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *