Parenting Tips : Exam முடிஞ்சதும் உங்கள் குழந்தைகளை பிஸியாக வைத்திருக்க சில ஐடியாக்கள் இதோ!
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் எல்லா குழந்தைகளுக்கும் தேர்வுகள் முடிந்துவிடும். எனவே, இந்த விடுமுறை நாட்களில், சில குழந்தைகள் தங்கள் பாட்டி தாத்தா வீட்டிற்கு செல்வது வழக்கம். சில குழந்தைகள் பெற்றோருடனே இருப்பார்கள். ஆனால் குழந்தைகளை நாள் முழுவதும் வீட்டிலேயே இருந்தால் அவர்கள் சோம்பேறிகளாக மாறுவது வாய்ப்பு அதிகம். எப்போதுமே மொபைல், டிவி தான் அடிமைகளாக இருப்பார்கள்.
ஆனால் இந்த விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புதிய விஷயங்களைக் கண்டிப்பாக சொல்லுக்கொடுப்பது அவசியம். இதனால் அவர்கள் அந்த நாட்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே பரீட்சைக்குப் பிறகு குழந்தைகளை எவ்வாறு பிஸியாக வைத்திருப்பது என்பதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்..
குழந்தைகளின் ஆர்வத்தை அறிந்து கொள்ளுங்கள்: ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்கென்று ஒரு ஆர்வம் உண்டு. சில குழந்தைகளுக்கு படம் வரைவது பிடிக்கும். இன்னும் சிலருக்கு நடனமாடுவது பிடிக்கும்.. எனவே, உங்கள் குழந்தைகளின் ஆர்வத்திற்கு ஏற்ப அவர்களை ஊக்குவியுங்கள்.
புதிய திறமைகள்: பெற்றோருக்குத் தெரியாத திறமை குழந்தைகளிடம் உள்ளது. ஆனால் பலர் அதை உணர்வதில்லை. எனவே இந்த விடுமுறை காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு புதிய திறமையை கற்றுக் கொடுங்கள். இதற்காக நீங்கள் அவர்களை சிறப்பு வகுப்பில் கூட சேர்க்கலாம்.
வெளியே அழைத்துச் செல்லுங்கள்: பொதுவாகவே குழந்தைகள் பள்ளி செல்லும் சமயத்தில் ஸ்கூல் டியூஷன், வீடு இப்படியே இருப்பார்கள். இந்த சமயத்தில் குழந்தைகள் வெளியில் விளையாடுவது அரிது. எனவே இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைகளை சிறிது நேரம் வெளியே அழைத்துச் செல்லுங்கள். இயற்கையோடு நேரத்தை செலவிடுங்கள். இவை உங்கள் குழந்தைகளால் என்றென்றும் நினைவில் இருக்கும்.
குழந்தைகளுடன் பேசுங்கள்: குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது, டியூஷனுக்கு செல்வது என இப்படியே நேரம் சரியாக இருப்பதால் பெற்றோருடன் சரியாகப் பேச முடிவதில்லை. இதன் விளைவாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் விருப்பு வெறுப்புகள், ஆசைகள், நம்பிக்கைகள் மற்றும் இலக்குகளை அறிய மாட்டார்கள். எனவே இந்த விடுமுறை நாட்களிலும் உங்கள் குழந்தைகளுடன் பேசுங்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்ளுங்கள். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டால், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் மனதில் பட்டதையும் ஓபனாக சொல்லுவார்கள்.
ஆன்லைனில் அடுத்த வகுப்பு: விடுமுறை முடிந்து குழந்தைகள் வேறு வகுப்பிற்குச் செல்வது வழக்கம். எனவே, இந்த விடுமுறை நாட்களில் அவர்களை பிஸியாக வைத்திருக்காமல், அடுத்த வகுப்பைப் பற்றி சொல்லிக் கொடுங்கள். இதற்காக யூடியூப் அல்லது கூகுளில் தேடினால் பாடங்களில் சில தலைப்புகள் வரும். இதன் காரணமாக அடுத்த பாடத்தை புரிந்து கொள்வதில் அதிக சிரமம் இருக்காது.