கோழியை இப்படி கழுவினால் உங்கள் சமையலறையில் கிருமிகள் பரவாது.. கண்டிப்பா தெரிஞ்சிகோங்க!
சிக்கன் என்றாலே பெரும்பாலானோருக்கு அலாதிப்பிரியம் என்றே சொல்லலாம். மேலும் பிரியாணி, கிரேவி, ஃப்ரை, ரோல்ஸ், கபாப், கறி என எதுவாக இருந்தாலும், சிக்கன் பிரியர்கள் ஃப்ரெஷ் சிக்கனை வாங்கி தான் விரும்பி செய்து சாப்பிடுவார்கள். ஆனால் சமைப்பதற்கு முன், அதுலிருக்கும் இரத்தம் மற்றும் கொழுப்பை அகற்ற கிச்சனில் நாம் கழுவுவது வழக்கம். ஆனால் அப்படி செய்வது மரணத்திற்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்னும் சொல்ல போனால், கோழியைக் கழுவுவதற்கான சரியான வழி பலருக்குத் தெரியாது.
ஆம்.. பொதுவாகவே, மக்கள் தங்கள் திருப்திக்காகவே கோழியில் இருக்கும் ஆபத்தான நுண்ணுயிரிகளை அகற்றுவதற்காகக் கழுவுகிறார்கள். உண்மையில் கோழி தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது. ஆனால் சமைப்பதற்கு முன் அதைக் கழுவினால் கூட அவை போகாது என்பது உங்களுக்கு தெரியுமா..?
பொதுவாக, கோழியில் சால்மோனெல்லா மற்றும் கேம்பிலோபாக்டர் எனப்படும் பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த கிருமிகள் கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம், காய்ச்சல், வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு மற்றும் இரத்த தொற்று போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். குறிப்பாக, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் உடல் பலவீனமுடையவர்கள் இந்த பாக்டீரியாக்களால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம் உள்ளது.
எனவே, நீங்கள் எவ்வளவு தான் கோழியை கழுவினாலும் அனைத்து கிருமிகளையும் அகற்றாது; மற்றும் இது மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை மட்டுமே நீக்குகிறது. அதுமட்டுமின்றி, கோழியை நீங்கள் உங்கள் கிச்சனில் வைத்து கழுவும் போது அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் உங்கள் சமையலறையைச் சுற்றிப் பரவ ஆரம்பிக்கும் என்பதால், இது கோழியிலிருந்து தொற்று ஏற்படும் அபாயத்தையும் கணிசமாக அதிகரிக்கிறது. எனவே, கோழியை எப்படி கழுவுவது என்று நீங்கள் யோசிக்கலாம். அதை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..
கோழியை கழுவுவதற்கான சரியான முறை:
பெரும்பாலான நேரங்களில், கோழி, பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, முதலில் கோழியின் மேற்பரப்பில் உள்ள அழுக்குகளை அகற்றி, உடனே அதை அப்புறப்படுத்தவும். இப்போது முக்கியமாக, கோழியில் இருக்கும் அனைத்து நுண்ணுயிரிகளையும் அகற்ற, கோழியை சூடான நீரில் வேகவைக்கவும் அல்லது சூடான நீரில் நன்கு கழுவ வேண்டும் என்று
நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கூடுதலாக, கோழியின் தோலை அகற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கோழியின் மார்பகம் மற்றும் அனைத்து பாகங்களிலும் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதில் கலோரிகளில் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் கோழி தோலில் மட்டும் தான் கொழுப்பு உள்ளது.
எனவே, இப்போது, நீங்கள் வீட்டில் கோழியை சமைக்கும் போதெல்லாம், இந்த குறிப்புகளை மனதில் வைத்து, கோழி உங்கள் விருப்பப்படி சமைத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்..