Amala Paul Photos: கர்ப்பமாக இருக்கும் அமலாபால் மடியில் தவழும் கியூட் குழந்தை! வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை அமலா பால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில்… தன்னுடைய மடியில் தவழும் கியூட் குழந்தையோடு விளையாடும் போட்டோஸ் சிலவற்றை வெளியிட அது வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால். விஜய், தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்த பின்னர், சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடினார். எனினும் தன்னுடைய நண்பர்களுடன், ஆன்மீக ட்ரிப், ட்ரக்கிங் போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.
ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பின்னரும்… சிங்கிளாகவே சுற்றி வந்த அமலா பால், கடந்த ஆண்டு ஜகத் தேசாய் என்பவரை காதலிக்கும் தகவலை அறிவித்தார். தன்னுடைய காதலை அறிவித்த ஒரே வாரத்தில் அவரையே திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்த அமலா பால், தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். தன்னுடைய கர்ப்பகாலத்தை கணவருடன் சேர்ந்து… மகிழ்ச்சியாக அனுபவித்து வரும் அமலா பால், அடிக்கடி சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது… தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மடியில் குட்டி குழந்தை ஒன்றை வைத்து கொண்டு விளையாடும் சில புகைப்படங்களை வெளியிட்டு, ‘2 ஹாப்பி கிட்ஸ்’ என கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோஸ் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.