Aditi Shankar : தொட்டதெல்லாம் ஹிட்டு… லக்கி ஹீரோயினாக மாறிய அதிதி ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Aditi Shankar

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரு மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மகள்கள் இருவருமே டாக்டருக்கு படித்துள்ளனர். ஐஸ்வர்யா டாக்டருக்கு படித்து முடித்துவிட்டு திருமணம் செய்துகொண்டார். ஷங்கரின் இரண்டாவது மகளான அதிதி டாக்டருக்கு படித்து முடித்த கையோடு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி அதிர்ச்சி கொடுத்தார்.

முத்தையா இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு திரைக்கு வந்த விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் அதிதி. அப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். விருமன் படத்தை நடிகர் சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரித்து இருந்தது. முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்ற அதிதிக்கு விருதுகளும் கிடைத்தன. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமானார் அதிதி.

விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் மகள் அதிதிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கிய இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி ஷங்கர். கடந்த ஆண்டு திரைக்கு வந்த இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. அடுத்தடுத்து அதிதி நடித்த இரண்டு படங்களும் ஹிட் ஆனதால் கோலிவுட்டில் ராசியான ஹீரோயின் என பெயரெடுத்தார் அதிதி.

தற்போது அதிதிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அதர்வாவின் சகோதரர் ஆகாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி. இதுதவிர நடிகர் சூர்யா – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாக உள்ள புறநானூறு என்கிற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடிக்க உள்ளார் அதிதி ஷங்கர். மேலும் அதர்வா ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இப்படி கோலிவுட்டில் லக்கி ஹீரோயினாக வலம் வரும் அதிதி ஷங்கரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம். அதன்படி அவர் ஒரு படத்துக்கு தற்போது ரூ.35 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அடுத்தடுத்த படங்களின் ரிசல்டை பொறுத்து லட்சத்தில் இருந்து சம்பளத்தை கோடிக்கு நகர்த்தும் முடிவிலும் இருக்கிறாராம் அதிதி. தற்போதைய நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு ரூ.80 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதிதியின் தந்தை ஷங்கருக்கு ரூ.250 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *