திமுகவில் ஓரங்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன்.!அதிமுக இணைந்த 15 நாட்களில் நெல்லை வேட்பாளர்.. மாஸ் காட்டும் இபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அதிமுக, திமுக அறிவித்துள்ளது. இதில் 18 தொகுதிகளில் திமுக – அதிமுக நேரடியாக களம் இறங்குகிறது. இதில் அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நெல்லை வேட்பாளர் சிம்லா முத்து சோழன் மார்ச் 7ஆம் தேதி தான் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவருக்கு உடனடியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே யார் இந்த சிம்லா முத்து சோழன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதாவிற்கு டப் கொடுத்த சிம்லா

திமுக துணை பொதுச்செயலாளராக இருந்தவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணபாண்டியன், இவர் .ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு பலமுறை வெற்றிபெற்றுள்ளார். இதனைடுத்து 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா களம் இறங்கினார். இவருக்கு டப் கொடுக்க எஸ்.பி.சற்குணபாண்டியனின் மருமகள் சிம்லா முத்துச்சோழனை திமுக களம் இறக்கியது. ஒரு தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி வித்தியாசம் குறைந்தபட்சம் 50ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும். ஆனால் சிம்லா முத்து சோழனில் களப்பணியால் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலையே ஜெயலலிதாவால் வெற்றி பெற் முடிந்தது.

நெல்லை வேட்பாளர் சிம்லா முத்து சோழன்

ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். எனவே அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தலிகளில் திமுக வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்த்தார். ஆனால் திமுக சார்பாக வாய்ப்பு வழங்கவில்லை. இதனையடுத்து கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் சிம்லா முத்துசோழன் இணைந்தார். இதனையடுத்து தற்போது அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில் நெல்லை வேட்பாளராக சிம்லா முத்து சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *