கிரீன் சிக்னல் கொடுத்த ஆளுநர்! அதிமுக முன்னாள் அமைச்சர்களை ரவுண்ட் கட்டப்போகும் பாஜக!
குட்கா ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரி சிறப்பு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை கோரியது.