ஹெக்டர் SUV-காரின் 2 புதிய வேரியன்ட்களை இந்தியாவில் அறிமுகப்படுத்திய எம்ஜி மோட்டார்..!

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி-ஆன Hector-ன் 2 புதிய வேரியன்ட்ஸ்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. Hector காரின் இந்த புதிய 2 வேரியன்ட்ஸ்கள் முறையே ஷைன் ப்ரோ (Shine Pro) மற்றும் செலக்ட் ப்ரோ (Select Pro) ஆகும்.

இந்த புதிய 2 வேரியன்ட்ஸ்களை பொறுத்தவரை வடிவமைப்பு, பரிமாணங்கள் மற்றும் பவர்டிரெய்ன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மாறாமல் அப்படியேதான் உள்ளது. எனினும் இவற்றில் பல புதிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வேரியன்ட்ஸ்களில் பல புதிய அம்சங்கள், தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் என பலவற்றை கொண்டுள்ளது. புதிய வேரியன்ட்ஸ்களின் எக்ஸ்-ஷோரூம்.விலை ரூ.16 லட்சம் முதல் துவங்குகிறது.

புதிதாக என்ன சேர்க்கப்ட்டுள்ளது?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ ஆகிய இரண்டு வேரியன்ட்ஸ்களிலும் 14-இன்ச் போர்ட்ரெய்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இவை தவிர மற்ற குறிப்பிடத்தக்க அம்ச மேம்படுத்தல்களில் எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஃப்ளோட்டிங் லைட் டர்ன் இண்டிகேட்டர்ஸ், கனெக்டட் எல்இடி டெயில் லேம்ப்ஸ் மற்றும் குரோம் டோர் ஹேண்டில்ஸ் உள்ளிட்டவை அடங்கும். இது மட்டுமின்றி, ஹெக்டரின் செலக்ட் ப்ரோ வேரியன்ட்டானது டூயல்-பேன் பனோரமிக் சன்ரூஃப் கொண்டுள்ளது. அதே நேரம் ஷைன் ப்ரோ வேரியன்ட் சிங்கிள்-பேன் (single-pane) எலெக்ட்ரிக் சன்ரூஃபுடன் வருகிறது. புதிதாக அறிமுகமாகி இருக்கும் செலக்ட் ப்ரோ வேரியன்ட்டில் 18-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஷைன் ப்ரோ வேரியன்ட்டானது 17-இன்ச் சில்வர் அலாய் வீல்களை கொண்டுள்ளது.

இந்த புதிய வேரியன்ட்ஸ்கள் பிளாக்-அவுட் தீம், லெதர் வ்ரேப் செய்யப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் பிரஷ்ட் மெட்டல் ஃபினிஷை (CVT 5-சீட்டர்) கொண்டுள்ளன. மேலும் இந்த எஸ்யூவி-யானது புஷ் பட்டன் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்மார்ட் கீ, டிஜிட்டல் ப்ளூடூத் கீ மற்றும் வசதி மற்றும் கீ ஷேரிங் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. இவற்றிலிருக்கும் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை க்ரூஸ் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், ஆல் 4 வீல் டிஸ்க் பிரேக்ஸ், ESP, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ABS + EBD, ஆல்-சீட் பெல்ட் ரிமைண்டர்ஸ் என மற்றும் பல அம்சங்கள் உள்ளன.

ஹெக்டரின் புதிய ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ வேரியன்ட்ஸ்கள் தனித்துவமான கார் ஓனர்ஷிப் திட்டமான “MG SHIELD” என்ற விற்பனைக்குப் பிந்தைய சர்விஸ் ஆப்ஷன்களுடன் வருகின்றன. வாடிக்கையாளர்கள் வரம்பற்ற கிமீ-களுடன் 3 வருட உத்தரவாதம், மூன்று ஆண்டுகளுக்கு சாலையோர உதவி மற்றும் 3 லேபர்-ஃப்ரீ பீரியாடிக் சர்விஸ்களுடன் ஒரு நிலையான 3+3+3 பேக்கேஜ் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடையலாம். ஷைன் ப்ரோ ரூ.16 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம் செலக்ட் ப்ரோ ரூ.17.30 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *