அனைவருக்கும் பொதுவான தேர்தல் அறிக்கை : தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.

தி.மு.க.வில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.இதில் தி.மு.க. செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த குழுவினர் பிப்ரவரி 5-ந்தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ழுத்துப்பூர்வமாக மனுக்கள் வாங்கியதுடன் தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகங்கள் வழியாகவும் ஆன்லைன் மூலமாகவும் கோரிக்கைகள் பெறப்பட்டிருந்தது.தொலைபேசி வாயிலாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள், 2,500-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக 4 ஆயிரத்துக்கும் மேலான பரிந்துரைகள்.40 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து வந்துள்ளனர்.

அனைவருக்கும் பொதுவான தேர்தல் அறிக்கையாக இது அமைந்துள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக மதுரை மாவட்ட மக்கள் செம குஷியில் உள்ளனர்.

சென்னை கோவை அடுத்து மக்கள் தொகையிலும், பரப்பளவிலும் மூன்றாவது இடத்தில் இருக்கும் மதுரைக்கு வளர்ச்சித் திட்டங்கள் பெரிதாக வருவதில்லை.

உதாரணம் : மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் அறிவிப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.மத்திய அரசு அறிவித்த மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனை பல ஆண்டுகளாக கிடைப்பில் போடப்பட்டு தற்போது தான் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ அமைக்கப்படும் இன்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருந்தாலும் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கே இன்னும் நிதி ஒதுக்காத மத்திய அரசு, மதுரை மெட்ரோ திட்டத்திற்கு எப்போது நிதி ஒதுக்கி, மதுரையில் எப்போது மொட்ரே அமைக்கப்படுவது என்ற நிலை உள்ளது.இதே போல மதுரை-பெங்களூர் இடையே அறிமுகப்படுத்தவிருந்த வந்தே பாரத் ரயிலும் கடைசி நேரத்தில் சென்னை-மைசூர் இடையே அறிமுகப்படுத்தப்பட்டு மதுரை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தது.

இந்த நிலையில் நேற்றைய தினம் தமிழக முதலமைச்சர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் மதுரை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள சில முக்கிய அறிவிப்புகள் சற்று ஆறுதல் தரும் விதமாக உள்ளது.

அந்த அறிவிப்புகள் என்னவென்றால்,
1. மதுரையில் ஐஐடி அமைக்கப்படும்
2.திருவாரூர் மற்றும் திருப்பதிக்கு மதுரையிலிருந்து ரயில் இயக்கப்படும்
3.மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்படும்,
4. மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்
5. திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் இடையே புறநகர் மின்சார ரயில்கள் அமைக்கப்படும்

தூத்துக்குடியை பொறுத்தவரையில் தண்ணீர் என்பது எப்போதும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக விளாத்திகுளம் வரை இருக்கக்கூடிய தண்ணீர் பிரச்சினையை சரி செய்வதற்கு 363 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு நிறைவடையக்கூடிய நிலையில் இருக்கிறது.திருச்செந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒரு மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டு அதற்கு முதல்வர் ஒப்புதலும் அளித்திருக்கக்கூடிய நிலையில் மிக விரைவிலேயே அந்த திட்டமும் நிறைவேற்றி தரப்படும்.

எல்.பி.ஜி. சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் விலை 75 ரூபாய், டீசல் விலை 65 ரூபாயாகக் குறைக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து 150-ஆகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும். ஒரே நாடு – ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும். மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.

தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக செயல்படுத்தி பல திட்டங்களை உருவாக்கியுள்ளார் கனிமொழி.சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீடு விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், திறம்பட செயல்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழி அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்திருந்தார். திமுக மூத்த தலைவர்கள் பலரும் தங்களின் மனமார்ந்த பாராட்டுகளையும் கூறி இருந்தனர்.

மொத்தத்தில் இத்தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கு பாராட்டுக்கள் வெகுவாக குவிந்து வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *