IPL 2024: தமிழ், ஹாலிவுட், சினிமாவுக்கு அடுத்த ஹீரோ ரெடி – யாரு சாமி இவர், எந்த கெட்டப்பிலும் மாஸா இருக்காரு!
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 17ஆவது சீசன் தொடக்க விழாவில் அனைத்து அணிகளின் கேப்டன்களும் அணி வகுப்பு நடத்த இருக்கின்றனர். ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் நாளை நடைபெறும் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சோனு நிகம், அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் ஆகியோர் இசை நிகழ்ச்சியை அரங்கேற்ற இருக்கின்றனர்.
இதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானம் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தான் தோனியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தோனி ஜீன்ஸ் பேண்ட் உடன் பிளாக் பணியன் அணிந்தவாறும், கையில் வாட்ச் மற்றும் பேண்ட் அணிந்தவாறு போஸ் கொடுத்துள்ளார். மேலும், பேக் ஒன்றையும் தனது தோலில் மாட்டியிருக்கிறார். கண்ணுக்கு கூலர் கிளாஸ் அணிந்திருக்கிறார்.
இப்படி எல்லாவற்றையும் அணிந்து ஹீரோ போன்று போஸ் கொடுத்துள்ளார். மேலும், இவரது நடையும் சிங்க நடை, ராஜ நடை போன்று தெரிகிறது. இப்படி எல்லாம் இருக்கும் தோனியை ஏன் ரசிகர்கள் கொண்டாட மாட்டார்கள்? நீங்களே சொல்லுங்கள். ஏற்கனவே தோனி எண்டர்டெயிண்ட்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிறுவனம் மூலமாக தமிழில் லெட்ஸ் ஹெட் மேரீடு என்ற படத்தையும் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இந்தப் படம் நல்ல விமர்சனம் பெற்ற நிலையில் அடுத்தடுத்த படங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தோனியின் இந்த தோற்றத்தை வைத்து தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோ ரெடியும், ஹாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட்டிலும் தோனி களமிறங்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தோனிக்கு எந்த மாநிலத்தில், எந்த ஊரில் தான் ரசிகர்கள் இல்லை. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளங்களை வைத்துள்ள தோனி சினிமாவிலும் முத்திரை பதிக்கலாம். இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்றால் சினிமாவில் அவருக்கு எதிர்காலம் அமோகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.