வினோதமான தீம் பார்க்.. மக்கள் Tea.. Coffee.. Wineல் குளிக்கலாமாம் – இது எந்த நாட்டில் இருக்கு தெரியுமா?
பூமிக்கு அடியில் ஏற்படும் நீரூற்றுகளைப் பற்றி நாம் பெரிய அளவில் கேள்விப்பட்டிருப்போம். சிலர் அதில் நீராடவும் செய்திருப்பார்கள். இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தீம் பார்கில், இயற்கையாகவே அமைந்து ஒரு வெந்நீர் ஊற்று இருக்கிறது. ஆனால் இதில் இயல்பாக குளிப்பது என்பதை தாண்டி, மக்கள் தங்களுக்கு விருப்பமான பானங்களை அதில் கலந்து அதில் குளிக்கும் வண்ணம் செய்திருக்கிறது Hakone Kowakien Yunessun என்ற தீம் பார்க்.
இந்த தீம் பார்கில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சமே இதுதான். இயற்கையான வெந்நீர் ஊற்றில் நீங்கள் குளித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதில் உங்களுக்கு பிடித்தமான பானங்களும் கலக்கப்படுவது தான் இதில் ஹைலைட். இங்கு வரும் பல மக்களும் “ரெட் ஒயின்” ஊற்றில் தான் குளிக்க அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஒயின் குளியல் ஒரு பெரிய 3.6 மீட்டர் உயர பாட்டிலைக் கொண்டுள்ளது. ஜப்பான் நேஷனல் டூரிஸம் ஆர்கனைசேஷன் அளித்த தகவலின்படி, ஒரு சிறப்பு ஒயின் ஷோவை அனுபவிக்கும் வாய்ப்பையும் மக்கள் பெறலாம், அதில் “ஊழியர்கள், குளிப்பவர்களுக்கு யூனஸ்சனின் சிறப்பு ஒயின் பாட்டிலை, அவர்கள் குளிக்கும் பொது கொண்டுவந்து தெளிக்கிறார்கள்”.
ஒயின் மட்டுமல்ல, பார்வையாளர்கள் காபி, ஜப்பனீஸ் சாக் மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் கூட குளியல் செய்யலாம். மது, காபி மற்றும் ஷேக் போன்ற குளங்களும் இந்த தீம் பார்க்கில் உள்ளன. மற்றும் தீம் பார்க்கின் இணையதளத்தின்படி, மேனியை மிளிரவைக்கும் சிறப்பு ஊற்றுகளும் இங்கு உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில், வெளியான ஒரு இன்ஸ்டாகிராம் ரீலில், ஒரு Vlogger இந்த ஒயின் குளியலை அனுபவிக்கும் காட்சி வைரலானது. இதுவரை அந்த வீடியோ 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ..
https://www.instagram.com/reel/C4Tp9u4yUXJ/?utm_source=ig_web_copy_link
அந்த குளத்தில் இறங்கி குளிப்பதோடு, அதை குடிக்கவும் நம்மால் முடியும் என்று அந்த இன்ஸ்டாகிராம் வாசி கூறியுள்ளார். இது எனக்கு கிடைத்த முற்றிலும் ஒரு மாறுபட்ட அனுபவம் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.