உள்ளங்கை தோல் உரியுதா? அதற்கு இது தான் காரணம்

பொதுவாகவே அனைவரும் வளரும் பருவத்தில் கைகளில் தோல் உரியும் பிரச்சினையை நிச்சயம் சந்திக்க வேண்டும்.

நமது அனைத்து வேலைகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் கைகளுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்ப்பட்டால் இது நமது அன்றாட வாழ்க்கை முறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு கைகளில் தோல் உறிவதற்கு என்ன காரணம் என்பது குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைக்கள் தொடர்பாகவும் இந்த பதிவில் பார்க்கலாம்.

கைகளில் தோல் உரிய முக்கிய காரணம் வறட்சியே. நம் உடலில் ஈரப்பதம் குறைந்து வறட்சி ஏற்படும் போது நமது உள்ளங்கைகளில் தோல் உரிகிறது.

கையில் தோல் உரியும் போது நம் உள்ளங்கைகளில் ஏதோ இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சில நேரத்தில் நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதினால் கூட கைகளில் தோல் உரியும் பிரச்சினை ஏற்படக்கூடும்.

அது மட்டுமன்றி சூரிய ஒளி தாக்குதல், சொரியாசிஸ், கெமிக்கல் நிறைந்த சோப் மற்றும் க்ரீம்களின் பயன்பாடு பருவ மாற்றம், அலர்ஜி, அரிப்பு போன்ற காரணங்களாலும் இவ்வாறு தோல் உரியலாம்.

மேலும் பாக்டீரியா தொற்று, நோய் தொற்று, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்களாலும் தோல் உரியும் வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றது.

உங்களுக்கு வறண்ட சருமத்தால் தோல் உரியும் பட்சத்தில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி (தேவையெனில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துகொள்ளலாம்) அதில் 10 நிமிடங்கள் உள்ளங்கைகளை வைத்து ஆழ்த்தி பின்னர் கைகளை மிதமாக துடைத்தால் வறட்வி நீங்கி தோல் உரிவது குறையும்.

விட்டமின் E எண்ணெய்யை கைகளில் தடவி மசாஜ் செய்தால் ஈரப்பதம் தக்க வைக்கப்படும்.இதனால் தோல் உரியும் பிரச்சினை எளிமையாக குறைய ஆரம்பிக்கும்.

கற்றாழை எடுத்து அதன் தோலை சீவி அதை தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் ஊறவிடவும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் திரவம் வெளியேறிய பின்னர் அதன் ஜெல் கைகளில் மசாஜ் செய்வதும் சிறந்த தீர்வு கொடுக்கும்.

தேங்காய் எண்ணெய்யை கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்தால் கைகளி் பற்றீரியா தொற்றுக்கள் இருந்தால் விரைவில் நீங்கும் மேலும் கைகள் வறட்சி இல்லாமல் மென்மையாக இருக்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *