நச்சுன்னு நாளு திட்டம்.. திமுக தேர்தல் வாக்குறுதி-யில் முக்கிய வளர்ச்சி திட்டங்கள்..!
இந்தியாவின் அடுத்த 5 வருட ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பதில் பெரும் போட்டி இருக்கும் வேளையில், பல அதிரடிகள் நிறைந்த கூட்டணி அறிவிப்புகள் வந்து ஓய்த நிலையில், திமுக அரசு நேற்று இந்தியா பிளாக் கூட்டணியை ஆதரித்து தேர்தல் வாக்குறதிகளை வெளியிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும் வெற்றி வாய்ப்பை கொண்டு இருப்பதாக கூறப்பட்டாலும், தேர்தல் முடிவு வெளியாகும் நாள் வரையில் பதற்றமான சூழ்நிலைகளுக்கும், அதிரடியான தேர்தல் பிரச்சாரத்திற்கும் பஞ்சம் இருக்காது.
இந்த நிலையில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், நாடு முழுவதும் அரசுப்பள்ளிகளில் காலை உணவு, இந்தியா முழுவதும் மாதம் தோறும் மகளிருக்கு 1000 ரூபாய். தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு. LPG சிலிண்டர் விலை 500 ஆக குறைக்கப்பு, பெட்ரோல் விலை 75 ஆக் குறைப்பு,டீசல் விலை 65 ஆக குறைப்பு என சாமானிய மக்களை கவரும் வகையில் முக்கியாமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
இதேவேளையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
கோயம்புத்தூர்: இந்தியாவில் வேகமாக வளரும் 2ஆம் தர நகரமாக விளங்கும் கோயம்புத்தூர் நகரை முக்கிய தொழில்நகரமாந திருப்பூர் உடன் மெட்ரோ மூலம் இணைக்கும் மிக முக்கியமான திட்டம் அறிவிக்கப்ப்டடு உள்ளது. ஏற்கனவே கோயம்புத்தூர் மெட்ரோ திட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயார் செய்வதில் தாமதமாகி வருகிறது.
ஓசூர்: பெங்களூர்-க்கு இணையாக ஓசூர்-ஐ வளர்க்க வேண்டும் என்பது தமிழ்நாட்டு அரசின் நீண்ட நாள் கனவு, ஓசூர் உற்பத்தி துறையில் அசத்தி வந்தாலும் ஐடி மற்றும் சேவைத்துறையில் நீண்ட தூர பயணிக்க வேண்டும். இதற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் ஓசூர்-ஐ மையமாக வைத்து திட்டமிடப்பட்டு வருகிறது.
ஓசூர் ஏர்போர்ட் மற்றும் மெட்ரோ: ஓசூர் நகரின் வளர்ச்சியை மேம்படுத்தவும், பெங்களூர் மற்றும் பிற பெருநகரங்கள் உடன் இணைப்பை மேம்படுத்தவும் ஓசூரில் விமான நிலையும் அமைப்பது குறித்த திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பெங்களூர் நகரை ஓசூர் உடன் மெட்ரோ உடன் இணைக்கும் முக்கியமான திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை மற்றும் சேலம்: தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை-க்கு அடுத்த அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகளும், அனைத்து விதமான பொருளாதார வளர்ச்சி ஆதாரமும் கொண்ட மாவட்டமான மதுரை மற்றும் சேலத்தின் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் இந்த தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஏர் ஆம்புலென்ஸ்: இந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கட்சி நேற்று இந்தியா பிளாக் கூட்டணி வெற்றி அடைந்தால் தமிழ்நாட்டில் ஏர் ஆம்புலென்ஸ் திட்டம் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: இதேபோல் சென்னையில் 3வது ரயில்வே முனையம், வேளச்சேரி – மவுண்ட் ரயில் பாதை, விம்கோ – எண்ணூர் மெட்ரோ ரயில் விரிவாக்கம், கோயம்பேடு – அம்பத்தூர் ரயில் விரிவாக்கம், மணலி-யில் ஈஎஸ்ஐ ஹாஸ்பிட்டல் ஆகியவை திமுக தனது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டு உள்ளது.