CSK vs RCB – சிஎஸ்கே அணியில் இன்று 4 வெளிநாட்டு வீரர்கள் யார்? முதல் ஆட்டமே ஒரே குழப்பமா இருக்கே

ஐபிஎல் தொடரில் இன்று முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர் சி பி அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த வரை கான்வே மற்றும் பதிரானா ஆகியோர் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர மற்ற அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

இந்த நிலையில் முக்கிய இரண்டு வெளிநாட்டு வீரர்கள் இல்லாததால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் எந்த நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. கான்வே தற்போது இல்லாததால் அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திர இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைப் போன்று இரண்டாவது வெளிநாட்டு வீரராக மோயின் அலி சிஎஸ்கே அணியில் இடம் பெறுவார். வங்கதேசத்தில் நடைபெற்ற பிரீமியர் லீக் தொடரில் அவர் நல்ல பார்மில் இருந்தது சிஎஸ்கேவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து மூன்றாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் தீக்சனா சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட இருக்கிறார்.

தோனி எப்போதுமே தீக்சனா மீது ஒரு தனி பாசம் வைத்திருக்கிறார். கேப்டன் ருதுராஜ் இருந்தாலும், அணி தேர்வில் தோனியின் தலையீடு நிச்சயம் இருக்கும். இந்த நிலையில் நான்காவது வீரராக யாரை பயன்படுத்துவது என்பதில் தான் குழப்பம் இருக்கிறது. தற்போது பதிரானா இல்லாததால் அவருக்கு பதிலாக வங்கதேச வீரர் முஸ்தஃபிக்ர் ரஹீமை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் முஸ்தஃபிசுர் ரஹீம் தேர்வு செய்யப்பட்டால் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கில் ஏழாவது இடத்தில் ஜடேஜாவும், எட்டாவது இடத்தில் சர்துல் தாக்கூரும், ஒன்பதாவது இடத்தில் தீபக்சாகரும் இருப்பார்கள். என்னதான் தீபக்சாகர், சர்துல் சிறப்பாக விளையாடினாலும் அவர்கள் இருவருமே பவுலர்கள் தான். மேலும் நடுவரிசையில் ரஹானே போதிய பார்மில் இல்லாமல் இருக்கிறார்.

இதனால் ரஹானேவை தேர்வு செய்வதா இல்லை அவருக்கு பதிலாக நியூசிலாந்து வீரர் டாரல் மிட்செலுக்கு வாய்ப்பு கொடுப்பதா என்ற குழப்பத்தில் சிஎஸ்கே அணி இருக்கிறது. அப்படி டாரல் மிச்செல் வந்தால் வேகப்பந்து வீச்சில் முஸ்தபிசுர் ரஹீமுக்கு வாய்ப்பு கிடைக்காது. இதனால் ஆர்சிபிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அணியின் நான்கு வெளிநாட்டு வீரர்களை தேர்வு செய்வது பெரும் சவாலாக இருக்கிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *