ஐபிஎல் 2024ஆம் ஆண்டு சீசன் இன்று தொடக்கம்..எந்த சேனலில் பார்ப்பது? கோப்பையை வெல்ல யாருக்கு வாய்ப்பு?

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இரண்டு மாதம் நல்ல விருந்தாக இந்த தொடர் அமையும். நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் தொலைக்காட்சி செய்திகளில் அரசியல் செய்தி தான் நிறையவே இருக்கும்.

ஆனால் எனக்கு அரசியல் போர் அடிக்கிறது என்று நீங்கள் நினைத்தால், இருக்கவே இருக்கிறது நமது தமிழ் Mykhel தளம். ஐபிஎல் தொடர்பாக அனைத்து செய்திகள் மற்றும் கணிப்புகள் என நீங்கள் பார்க்காத கோணத்தில் உங்களுக்கு விரைவாகவும் புதுமையாகவும் வழங்க நாங்கள் காத்திருக்கிறோம்.

ஏலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பு நடைபெறும் கடைசி தொடர் இது என்பதால் இந்த சீசனில் விளையாடும் வீரர்கள் அடுத்த சீசனில் அதை அணிக்கு விளையாடுவார்களா என்பது சந்தேகம் தான். இதே போன்று விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி போன்ற ஜாம்பவான்கள் கேப்டன் பதவியை விட்டு விலகி இருப்பதால் ஐபிஎல் எதிர்காலத்திற்கான புத்தகத்தில் முதல் பக்கமாக இந்த சீசன் அமையும்.

தோனிக்கு இது கடைசி தொடராக இருக்கும் என்பதால் அவர் ஆறாவது முறையாக கோப்பையை வெல்வாரா என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் பெங்களூர் அணி வீராங்கனைகள் மகளிர் பிரீமியர் லீக் தொடரை வென்று விட்டதால் இம்முறை விராட் கோலி ஆர் சி பி அணிக்காக ஐபிஎல் தொடரை வென்றே ஆக வேண்டும் என்ற ஒரு அழுத்தமும் ஏற்பட்டிருக்கிறது.

மற்றொரு பக்கம் மும்பை அணி மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில் புதிய தலைமையின் கீழ் அந்த அணி ஆறாவது கோப்பைக்காக கடுமையாக போராடும். இது ஒரு பக்கம் இருக்க, கௌதம் கம்பீர் தற்போது மீண்டும் கேகேஆர் அணிக்கு மென்டராக திரும்பி இருக்கிறார். மேலும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் அனுபவிக்க கேப்டன் என்றால் அது ஸ்ரேயாஸ் தான்.

கொல்கத்தா அணி 10 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்லாத நிலையில் இம்முறை புதிய கூட்டணியோடு அவர்கள் கோப்பையை கைப்பாற்றுவார்களா என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதேபோன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல் அணியும் நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் அவர்களிடமும் சின்ன சின்ன குறை இருக்கிறது.

இந்த ஐபிஎல் போட்டிகள் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோ சினிமாவில் இலவசமாக பார்க்கலாம். ஐபிஎல் போட்டி மதியம் இருந்தால் மூன்று முப்பது மணிக்கு இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்கும். இன்று முதல் நாள் என்பதால் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனால் போட்டி எட்டு மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *