வோக்ஸ்வேகன் ID.4 எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்! டிசைனில் கலக்கும் LED ஹெட்லைட்!
வோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் அதன் வருடாந்திர மாநாட்டின் போது, இந்தியாவில் முதல் முறையாக ஐடி.4 (ID.4) எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டே இந்தியாவில் ஐடி.4 எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Volkswagen ID.4 Launched in India
டைகன் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் மற்றும் டைகன் ஜிடி லைன் ஆகிய கார்களின் வரிசையில் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 காரும் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுடன் விர்டஸ் ஜிடி பிளஸ் ஸ்போர்ட் கான்செப்ட் காரும் காட்சிப்படுத்தப்பட்டது.
Volkswagen ID.4 EV
வோக்ஸ்வேகன் (Volkswagen) ஐடி.4 கார் உலகளாவிய சந்தைகளில் விற்கப்படுகிறது. ஹெட்லைட் மற்றும் கிரில் வடிவமைப்பு காரணமாக உறுதியான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. புதிதாக வரும் கார்களில் ஹெட்லைட்களின் அளவு குறைக்கப்படும் போக்கிற்கு வித்தியாசமான வகையில் இந்தக் கார் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
Volkswagen ID.4 Specifications
தனித்துவமான தோற்றத்தைப் பெற்றுள்ளன ID.4 கார் தேர்ந்தெடுக்கும் வேரியண்ட்டைப் பொறுத்து 19 அல்லது 20 அங்குல டயரைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. உலகளவில், வோக்ஸ்வேகன் ID.4 ஆனது ஆல்-வீல்-டிரைவ் உட்பட பல வேரியண்ட்களில் கிடைக்கிறது.
Volkswagen ID.4 Electric car
ID.4 காரில் உள்ள அனைத்துமே LED விளக்குகள்தான். மூன்று விதமான வெப்பநிலைக் கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி மற்றும் 12-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டிருக்கிறது.