சனி உதயத்தால் இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வம் கூடும், தொல்லைகள் தீரும்
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தால் தொழில் தொடர்பான குழப்பங்கள் நீங்கி தொழில் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். இப்போது உங்கள் கடின உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் பயனடைவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். நிதிநிலை மேம்படும். பதவி உயர்வால் பண ஆதாயம் உண்டாகும்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கும் சனியின் உதயம் நன்மை தரும். உங்கள் ஆளுமை உயரும். உங்களை தவறாக நினைத்தவர்களே உங்களை புகழ்வார்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடந்துமுடியும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.
மிதுனம்: கும்ப ராசியில் சனியின் உதயம் திடீர் சுப பலன்களைத் தரும். தடைபட்ட பல பணிகள் மீண்டும் துவங்கி முடிக்கப்படும். இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்களுக்கு வேலையை மாற்றும் விருப்பம் இருந்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும். தந்தையுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.
கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு சனி உதயம் கலவையான பலன்களை அளிக்கும். கடக ராசிக்காரர்கள் சில இடங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில இடங்களில் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், புதிய கூட்டாளிகள் கிடைப்பார்கள். ஆன்மீக விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: சனியின் உதயம் சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நிதி ஆதாயம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் நல்ல ஆதரவு கிடைக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் உதயத்தால் பல வித சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. கன்னி ராசி மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கும் பொன்னான வாய்ப்பைப் பெறப்போகிறார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான காலமாக இருக்கும். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள துலா ராசிக்காரர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைத்து வருமானம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.
விருச்சிக ராசிக்காரர்கள் சனி உதய காலத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப பிரச்சனைகளில் கவனம் தேவை. யார் மீதும் அதீத நம்பிக்கை கொள்ள வேண்டாம். குடும்ப வாழ்க்கையுடன், தொழில் வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் கடின உழைப்பும் எச்சரிக்கையும் தேவைப்படும். வாகனம், சொத்து வாங்க யோகம் உண்டு.
தனுசு: வணிகத்தில் ஈடுபட்டிருகும் தனுசு ராசிக்காரர்களுக்கு புதிய தொடர்புகள் கிடைக்கும். இதனால் ஆதாயம் கிடைக்கும். இது வணிகத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய மற்றும் பெரிய அளவிலான லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்துடன் உழைப்பிலும் கவனம் செலுத்துவீர்கள். இது நல்ல பலன்களைத் தரும்
மகரம்: கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். சனி உதயத்தின் தாக்கத்தால் பணத்தை சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் இருக்கும்.
கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் தங்கள் ஆளுமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். சோம்பேறியாக இருக்காமல், முழு உழைப்புடனும் நேர்மையுடனும் தங்கள் வேலையைச் செய்ய வேணும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும், நிதி நிலையும் மேம்படும். திருமண உறவுகள் மேம்படும். வாழ்க்கையில் வெற்றிபெற, முயற்சிகளில் நிலைத்தன்மையைப் பேண வேண்டும்.
மீனம்: சனி உதயம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அள்ளித்தரும். உடல் நலம் மேம்படும். நிதி நிலை மேம்படும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிய நோய்களைக் கூட அலட்சியம் செய்யாதீர்கள்.