கிரக தோஷங்களையும் போக்கும் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு! வல்வினைகளை போக்கும் சிவமந்திரம்!
சைவர்களுக்கு மிகவும் முக்கியமான பிரதோஷ நாள் இன்று. மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை என இரு பிரதோஷங்கள் வந்தாலும், திரயோதசி திதியில் சூரியன் மறைவதற்கு முன் மூன்றேமுக்கால் நாழிகையும், பின் மூன்றேமுக்கால் நாழிகையும் உள்ள காலத்தில் சிவபெருமாக்காக இருக்கும் விரதம் பிரதோஷ விரதமாகும்.
பிரதோஷ நாள் இன்று பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது. பிரதோஷம் பற்றிய பலருக்கும் தெரியாத பல அரிய தகவல்களை தெரிந்துக் கொள்வோம். தினமும் மாலை 3 முதல் 6 வரையிலான நேரம் பிரதோஷ காலம் என்றே குறிப்பிடப்படுகிறது. நித்ய பிரதோஷம் என்று இந்த நேரம் அழைக்கப்படுகிறது.
மாதப் பிரதோஷம்
தேய்பிறை திரயோதசி திதியில் வரும் பிரதோஷம், மாதப் பிரதோஷம் என்று அனுசரிக்கப்படுகிறது.
மகாப் பிரதோஷம்
சிவ பெருமான் விஷம் அருந்தி, உலகின் துயர் தீர்த்த சம்பவம் நடைபெற்றது ஒரு சனிக்கிழமை நாளில் தான் என்பதால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘மகாp பிரதோஷம்’ எனப்படும்.
பிரதோஷ நாளன்று விரதம் இருப்பது சிறப்பு. விரதம் இருப்பவர்கள், மாலை வேளையில் சிவன் கோவிலுக்கு சென்று சிவ தரிசனம் செய்த பிறகே உணவு சாப்பிட்டு விரதத்தை முடிப்பது மரபாக இருக்கிறது.
பிரதோஷ விரதத்தின் முக்கியத்துவம்
பாற்கடலை கடைந்தபோது உருவாகிய, ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காத்த சிவ பெருமான் நீல கண்டனாக காட்சி அளித்த சமயத்தில், சிவபெருமானை தேவர்கள் வழிபட்டபோது, நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவன் காட்சி அளித்தார். அந்த் காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வது பாவங்களையும், தோஷங்களையும் நீக்கக் கூடியது ஆகும்.
சகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ மந்திரம்
பிரதோஷ காலத்தில் நமசிவாய என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே சிவாலயத்தை வலம் வந்தால் சகல விதமான தோஷங்களும் நீங்கி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ வழிபுரியும் மந்திரம் இது.
கிரகக்கோளாறை போக்க வழிபாடு
தோஷம், கண் திருஷ்டி, கிரக கோளாறு போன்றவற்றால் மனிதர்கள் அனுபவிக்கும் துன்பங்களைத் தீர்க்க சிவ வழிபாடும், அதிலும் குறிப்பாக பிரதோஷத்தன்று செய்யும் வழிபாடு உதவும் என்றால் நல்லது தானே?
பிரதோஷ நாளன்று, மாலை 4:30 மணியிலிருந்து 6:30 வரையிலான பிரதோஷ காலத்தில் சிவாலயத்திற்குள் செல்லுங்கள். அப்போது சிகப்பு நிறத்திலான மலரை எடுத்துச் செல்லுங்கள். ஆலயத்திற்கு சென்று நந்தி தேவரையும், சிவபெருமானையும் வணங்கிய பிறகு கோவிலை வலம் இருந்து இடமாக ஒன்பது முறை பிரகார வலம் வர வேண்டும்.
நமசிவய என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டே பிரகாரத்தை வலம் வரவேண்டும்.ஒன்பது முறை கோவிலை வலம் வந்த பிறகு கையில் இருக்கும் மலரை சிவபெருமானுக்கு சமர்ப்பித்துவிடுங்கள்.
பிரதோஷ நாளில் சிவப்பு மலரால் சிவபெருமானை வணங்கும் போது தோஷங்கள் கண் திருஷ்டிகள் தீய சக்திகள் என பாடாயப்படுத்தும் அனைத்து தோஷங்களும் தொல்லைகளையும் சிவபெருமான் நீக்கிவிடுவார் என்பது நம்பிக்கை ஆகும்.