Okra Water: வழவழ கொழ கொழன்னு இருந்தாலும் உடலை ‘ஃபிட்டா’ வைக்கும் வெண்டைக்காய் நீர்!

வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும் பண்புகளுக்காக அறியப்படும் வெண்டைக்காய் ருசியான காய் மட்டுமல்ல, நினைவாற்றலை அதிகரிக்கும் அற்புதமான காய் ஆகும்.

உடல் எடையை வேகமாக குறைக்க, இந்த காய்கறியின் நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ஒரே வாரத்தில் அதன் விளைவு தொப்பை கொழுப்பு குறைவதில் தெரியும். பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் முக்கியமான ஒன்றான வெண்டைக்காயை, சாம்பார், புளிக்குழம்பு, மோர் குழம்பு, பொரியல், வறுவல், பஜ்ஜி என பல விதமாக சாப்பிட்டிருக்கலாம். ஆனால், எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வெண்டைக்காயின் நீரை வெறும் வயிற்றில் பருகிவந்தால், ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர்வதுடன், உடல் எடையும் குறையும். அதேபோல, வெண்டைக்காய் தண்ணீரை பருகிவந்தால் உடல் எடை சட்டென்று குறையும்.

வெண்டைக்காய் ஊட்டச்சத்துக்கள்
வெண்டையில், வைட்டமின் சி, வைட்டமின் பி6, நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிக கொழுப்பு உடலில் படிவதைத் தடுக்கும் வெண்டைக்காய், நீரிழிவு மற்றும் செரிமான நோய்களை சீர் செய்யவும் உதவுகிறது.

ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள், வெண்டைக்காயை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து உட்கொள்வதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுடன், எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.

நார்ச்சத்து கொண்ட வெண்டைக்காய்
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், வெண்டைக்காய் சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது. அதேபோல, வெண்டைக்காய் தண்ணீர் குடிப்பதால், பசி எடுக்காது. எனவே, உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், அதீத பசியை அடக்க முடியாமல் அதிகப்படியான உணவை உண்பவர்களுக்கு வெண்டைக்காய் ஏற்றது.

வளர்சிதை மாற்றம்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் வெண்டைக்காய் சூப், உடலில் இருக்கும் கூடுதல் கொழுப்பை எரிக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெண்டைக்காய் நீர் குடிப்பதன் மூலம் எடையை துரிதமாகக் குறைக்கலாம்.

எடை குறைக்கும் வெண்டைக்காய் தண்ணீர் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்
6-7 நடுத்தர அளவிலான வெண்டைக்காய்
போதுமான அளவு நீர்

வெண்டைக்காயின் நுனிகளை இருபுறமும் நீக்கவும். பிறகு, வெண்டைக்காய்களை மெலிதான துண்டுகளாக நறுக்கி அவற்றை தண்ணீரில் ஊற வைக்கவும். இரவு முழுவதும் நீரில் ஊற விடவும். அடுத்த நாள் காலை, ஊறிய வெண்டைக்காயின் இருந்து தண்ணீரை பிழிந்து எடுக்கவும். இந்த திரவம் வழவழவென்று இருக்கும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
இந்த வெண்டைக்காய் நீர் தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவந்தால், உடல் எடை குறைவதுடன், எலும்புகள் பலம் அடையும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *