ஒல்லி பெல்லி அழகியாக விருப்பமா? இந்த பானம் ஒரே வாரத்தில தொப்பையை கரைக்கும்…
ஆரோக்கியத்தை பாதுகாக்க உணவே அடிப்படை. ஆனால், நாம் உண்ணும் உணவே நோய்களையும் ஏற்படுத்துகிறது என்பதும் நகைமுரண் என்று சொல்லலாம். இருந்தாலும், நமது உடலுக்குள் உணவாக செல்வது திட மற்றும் திரவ வடிவில் உள்ள உணவுப்பொருட்கள் தான். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக இருப்பதுபோல, நோய்களையும் தீர்க்கிறது.
நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் முக்கியமானதாக கருதப்படும் உடல் எடை, கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு மூலிகை மற்றும் மசாலாக்களை நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். அதில் ஓமம் மற்றும் சீரகம் இரண்டும் மிகவும் சக்தி வாய்ந்த மசாலாக்கள். சமையல்களில் முக்கியமான மசாலாவாக பயன்படுத்தப்படும் இந்த மேஜிக் மசாலாக்கள், மூலிகை நீராகவும் பயன்படுத்தப்படுகிறது.
உணவில் சேர்க்கும்போது, தன்னுடன் சேரும் உணவுப் பொருட்களுடன் சேர்ந்து உணவின் ருசியையும் குணத்தை மேம்படுத்தும் சீரகம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டும் நீரில் போட்டு கொதிக்க வைத்து பானமாகவும் குடிக்கப்படுகிறது. இதைத் தவிர, கசாயமாக பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
சீரகம் மற்றும் ஓமத்தை ஒன்றாக கசாயமாக சேர்த்து குடிக்கும்போது, அது பெண்களுக்கு மிகவும் அற்புதமான மருந்தாக செயல்படுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாகவும், எடை இழப்புக்கான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் இந்த கசாயம் மந்திரம் போல் செயல்படுகிறது.
பெண்களுக்கு மாதாந்திர மாதவிடாய் சமயத்தில் வயிற்றில் பயங்கரமான வலி, தசைப்பிடிப்பு மற்றும் சோர்வு ஆகியவற்றால் அவதிப்படுவர்கள். அவர்களுக்கு சீரகமும் ஓமமும் நல்ல மருந்தாக செயல்படும். உடல் எடையை குறைக்க முடியவில்லை என்ற கவலையில் இருப்பவர்கள், ஆரோக்கியமாக எடையைக் குறைக்க இந்த அற்புத மசாலாக்களை பயன்படுத்தலாம்.
சீரகம் – ஓமம் கசாயம்
மாதவிடாய் காலத்தில் வலி நிவாரணியாக செயல்படும் கசாயம்
எடை இழப்புக்கு உதவும் கசாயம்
செரிமானத்தை மேம்படுத்தும் ஓமம் சீரகம் கசாயம்
சீரகம் – ஓமம் கசாயம் மருத்துவ பண்புகள்
ஆக்ஸிஜனேற்றங்கள் நிரம்பியுள்ள சீரகம் – ஓமம் கசாயம், செரிமானத்தை மேம்படுத்தவும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிப்பதில் சீரகம் – ஓமம் கசாயம் அற்புதமான மருந்தாக செயல்படும்.
உடலில் இருந்து நச்சு கூறுகளை அகற்ற சீரகம் – ஓமம் கசாயம் உதவுகிறது.
சீரகம் – ஓமம் கசாயம் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:
1/4 டீஸ்பூன் ஓமம்
1/4 டீஸ்பூன் சீரகம்
1/4 டீஸ்பூன் வெந்தயம்
வெல்லம் தேவைக்கு ஏற்ப
2 கிளாஸ் தண்ணீர்
தண்ணீரில் சீரகம், ஓமம் மற்றும் வெந்தயத்தை கலந்து இரவு முழுவதும் வைத்து விடவும். தண்ணீரில் நன்கு ஊறிய சீரகம் ஓமம் மற்றும் வெந்தயத்தை வடிகட்டி தண்ணீரை தனியாக பிரித்துக் கொள்ளவும். இந்த கசாயத்தில் வெல்லத்தை சேர்த்து குடிக்கவும். இந்த பானத்தில் இரும்புச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
அதேபோல, சீரகம் மற்றும் ஓமத்தை தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்கு கொதித்த பிறகு அதில் இஞ்சியையும் சேர்த்து கொதிக்க விட்டு வெல்லம் சேர்க்கவும். வெந்நீரின் சூடு குறைந்தவுடன், அதில் எலுமிச்சையை பிழிந்து மூலிகைத் தேநீராக குடிக்கவும். இந்த கசாயம், மாதவிடாய் பிரச்சனை, தொந்தி தொப்பை, உடல் பருமன், செரிமானக் கோளாறுகள் என பல பிரச்சனைகளுக்கு ஒற்றை தீர்வாக மாறும்.