டக்குன்னு வயிறு தட்டையாகனுமா? தினமும் 10 நிமிடம் ‘இதை’ பண்ணுங்க..

சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுவது, உடல் பருமன் பிரச்சனைதான். இதனால், மிக இளம் வயதிலேயே பல்வேறு மருத்துவ பிரச்சனைகளை பலர் சந்தித்து வருகின்றனர். உடல் எடையை சட்டென குறைக்க வேண்டும் என பலருக்கு ஆசை இருந்தாலும், அதற்கான தகுந்த முயற்சிகளை எடுக்க வேண்டியதும் அவர்களின் முக்கிய வேலையாகும். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுவது, உடற்பயிற்சி செய்தல் மற்றும் சரிவர டயட்டில் இருத்தல். இப்படி, சரியான முறையில் சீக்கிரமாக உடல் எடையை குறைக்க சில உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன உடற்பயிற்சிகள் தெரியுமா?

10 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடல் எடை குறையுமா?

உங்கள் உடலில் அதீத கவனம் செலுத்துவது பல சமயங்களில் கடினமான காரியமாக தோன்றலாம். ஆனால், இதை செய்வதால் கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம். தினசரி உடற்பயிற்சி செய்ய இப்போதுதான் ஆரம்பித்தேன் என கூறுபவர்கள், கண்டிப்பாக 10 நிமிட உடற்பயிற்சியில் இருந்து உங்கள் நாளை தொடங்கலாம். தினமும் 10 நிமிடம் வர்க்-அவுட் செய்வதால் 100ல் இருந்து 200 கலோரிகள் வரை உடல் எடையை குறைக்கலாம். இதற்கு என்னென்ன உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் தெரியுமா?

1.பர்பீஸ்:

10 நிமிட உடற்பயிற்சியை, பர்பீஸ் பயிற்சியுடன் ஆரம்பிக்கலாம். இந்த உடற்பயிற்சியை 30 முதல் 45 வினாடிகள் வரை செய்யலாம். இந்த உடற்பயிற்சி செய்கையில் நமது உடலில் உள்ள அனைத்து தசைகளும் செயல்படுமாம். இது, அதிக எஃபெக்ட் உள்ள உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும்.

2.பிரிட்ஜ், ஸ்டெப் பேக்ஸ் மற்றும் லஞ்சஸ்:

இந்த உடற்பயிற்சிக்கு எந்த உபகரணங்களும் தேவையில்லை. இந்த வர்க்-அவுட்டுகளை செய்வதால் உங்கள் இடுப்பின் வலு அதிகரித்து உடலின் மேற் பகுதியை வலுவாகும். கராதே கிட் படத்தில் கோட்டை கழற்றி கீழே போடச்சொல்லி மீண்டும் அதையே பல முறை செய்ய சொல்வார் ஜாக்கி சான். அதே போலத்தான் இந்த வர்க் அவுட்டும். இதில் பல முறை கீழே படுத்து, பின்பு எழுந்து நிற்க வேண்டி வரும். இது ஒரு நல்ல எளிமையான கார்டியோ உடற்பயிற்சியாகவும் கருதப்படுகிறது.

3.HIIT வர்க்-அவுட்ஸ்:

அதிகளவில் கொழுப்பை கரைக்கும் உடற்பயிற்சிகளை HIIT வர்க்-அவுட் என கூறுவர். இவை, உடற்தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளாகும். புஷ் அப்ஸ், ட்ரைசப் டிப்ஸ், ப்ளாங்க், ஸ்குவாட் உடற்பயிற்சிகள் போன்றவை இந்த உடற்பயிற்சி பிரிவில் அடங்கும். இந்த உடற்பயிற்சிகளை செய்கையில் கையில் டம்புள்ஸ் வைத்திருப்பதும் வைத்துக்கொள்ளாததும் அவரவர் விருப்பமாகும்.

4.ப்ளாங்க்ஸ்:

இந்த உடற்பயிற்சியை செய்ய, பெரிய இடம் தேவையில்லை, கையில் எந்த உபகரணங்களும் இருக்க தேவையில்லை. நம் உடல் தோரணையை மாற்றியமைக்கும் உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்றாகும். அது மட்டுமன்றி, நமது பின்புறத்தின் வடிவம் சீராகவும் தொப்பையை குறைக்கவும் இந்த உடற்பயிற்சியை செய்யலாம். முதலில் 30 வினாடிகளுக்கு ப்ளாங்க் உடற்பயிற்சியை செய்ய வேண்டும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக இதன் வினாடிகளை உயர்த்திக்கொண்டே செல்லலாம். 10 நிமிடங்கள், இப்படி இடைவேளை விட்டு செய்யலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *