இளையராஜா பயோபிக்கை இயக்க இருந்த மாரி செல்வராஜ்! தடுத்த இசைஞானி..காரணம் என்ன?

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க இருந்ததாகவும், அதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கோலிவுட் திரையுலகின் இசை ஜாம்பவான் ஆன இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு, தற்போது படமாக மாற உள்ளது. இந்த நிலையில், இப்படத்தை எடுப்பதற்கு முதலில் மாரி செல்வராஜ்ஜின் பெயரை பரிந்துரைக்கப்பட்டதாகவும், அவர் இப்படத்தை இயக்குவதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மாரி செல்வராஜ்ஜின் பெயர் பரிந்துரை..

தமிழ் திரைப்பட இயக்குநரான மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள் எனும் படத்தை எடுத்து கோலிவுட் திரையுலகிற்குள் அறிமுகமானார். இந்த படம், சாதிய அடக்குமுறை குறித்தும் அதனால் அவதிப்படுபவர்கள் குறித்தும் எடுக்கப்பட்டிருந்தது. அந்த வரிசையில், கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. இப்படங்களிலும் சாதிய அடக்குமுறைகள் குறித்துதான் பேசப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இளையராஜாவின் படத்தை இயக்குவதற்கு யாரை இயக்குநராக தேர்ந்தெடுப்பது என டிஸ்கஷன் நடைப்பெற்றதாம். அப்போது, மாரி செல்வராஜின் பெயரை நடிகர் தனுஷ் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. தனுஷூம், மாரி செல்வராஜ்ஜும் எற்கனவே கர்ணன் படத்தில் கைக்கோர்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து, மாரி செல்வராஜ்ஜின் பெயரை தனுஷ் பரிந்துரைத்திருக்கிறார். இதை கேட்ட இளையராஜா, தானும் மாரி செல்வராஜ்ஜும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நாளை இவர்கள் இருவரும் ஒரே படத்தில் சேர்ந்து பணிபுரிந்திருக்கின்றனர் என்ற பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக அவர் மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவலை, பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

பொது மக்கள் கருத்து..

இளையராஜா, இவ்வாறு கூறி மாரி செல்வராஜை தனது படத்தில் பணிபுரிவதில் இருந்து தடுத்திருப்பதாக அந்த பத்திரிக்கையாளர் கூறியுள்ளதை அடுத்து, இந்த தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஒரு சிலர், இளையராஜா தன்னை இப்படி நினைத்து கொண்டிருப்பது மிகவும் மனவேதனை அளிப்பதாகவும், சாதிய அடிப்படையில் அவரது படைப்புகளை தாங்கள் பார்த்ததில்லை என்றும் கூறி வருகின்றனர்.

வேலையை ஒழுங்காக முடிப்பாரா அருண் மாத்தேஸ்வரன்?

அருண் மாத்தேஸ்வரன், ஏற்கனவே நடிகர் துனுஷை வைத்து ‘கேப்டன் மில்லர்’ படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்ததை ஒட்டி, இதன் மீது மக்களுக்கு பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது. விமர்சன ரீதியாக கொஞ்சம் அடிவாங்கிய இப்படம், வெகு ஜன மக்களை தியேட்டரின் பக்கம் ஈர்க்கவில்லை என்ற கருத்து எழுந்துள்ளது. காட்சிக்கு காட்சி துப்பாக்கி சண்டை, ரத்தக்கிளறி காட்சிகள் இருந்தது இதற்கு காரணம் என பலர் தெரிவித்துள்ளனர்.

கேப்டன் மில்லர் படத்தின் மூலம் ரசிகர்களை அருண் மாத்தேஸ்வரன் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் பலர் கருதுகின்றனர். அது மட்டுமன்றி, அருண் இதுவரை தமிழ் திரையுலகில் வெகு சில படங்களை மட்டுமே இயக்கியிருக்கிறார். எனவே, இவரை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்துள்ளனரே, என ரசிகர்கள் பலர் பேசி வருகின்றனர். இப்படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் அல்லது கமல் ஹாசன் போன்ற இயக்குநர்கள் இயக்கியிருக்கலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிலர், இம்முறை கண்டிப்பாக அருண் மாத்தேஸ்வரன் தான் யார் என்பதை நிரூபித்து காட்டுவார் என கூறி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *