சூர்யாவை ஒரு நாள் மட்டும் கேட்ட ரசிகை.. ஜோதிகா போட்ட நச் கமெண்ட்
தமிழ் சினிமாவின் எவெர்க்ரீன் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சூரிய ஜோதிகா. இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் முதன் முதலில் ஒன்றாக நடித்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அதன் பின், பேரழகன், மாயாவி, காக்க காக்க, சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது, அதன் பின் இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2007 ஆம் ஆண்டு தியா என்ற மகளும், 2010 ஆம் ஆண்டு தேவ் என்ற மகனும் பிறந்தனர்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் நடிப்பிற்கு கம் பேக் கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி மொழிகளிலும் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ‘காதல் தி கோர்’ திரைப்படம் ஜோதிகாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. அதை தொடர்ந்து பல வருடங்கள் கழித்து ‘ஷைத்தான்’ படத்தின் மூலம் தற்போது மீண்டும் இந்தியில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஜோ. படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமூக வலைதள பக்கத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் ஜோதிகா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள், சுற்றுலா செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஜோதிகாவின் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில், சூர்யா ரசிகை ஒருவர், ‘‘சில்லுனு ஒரு காதல் படத்தில் ஐஷுவிற்காக சூர்யாவை ஒரு நாள் விட்டுக்கொடுத்தது போல், எனக்கும் தருவீர்களா? நான் கடந்த 16 வருடங்களாக சூர்யாவின் தீவிர ரசிகை” என்று கம்மெண்ட் செய்துள்ளார்.
‘‘நோ.. அதற்கெல்லாம் அனுமதி இல்லை” என்று அந்த கமெண்டுக்கு ரிப்ளை செய்துள்ளார் நடிகை ஜோதிகா. நடிகை ஜோதிகாவின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் உள்ள சூர்யா ஜோதிகா தம்பதியினர், இன்றும் காதல் பொங்க இளம் காதல் ஜோடிகளாக வளம் வருவது அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கிறது என்றால் மறுக்க முடியாது.